நெருக்கடிகளை சரியாக மதிப்பீடு செய்து மக்கள் ஆணையின் ஊடாக சிறந்த ஆட்சிக்கு வழிவகுக்கும் தேர்தலுக்கு தாமதமின்றி பிரவேசிக்க வேண்டும் - முன்னாள் சபாநாயகர்

Published By: Digital Desk 3

16 Feb, 2023 | 09:17 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்)

நாட்டில் உருவாகிக் கொண்டிருக்கும் பாரதூரமான நெருக்கடிகளை சரியாக மதிப்பீடு செய்து, பொது இணக்கப்பாட்டின் ஊடாக, மக்களின் இறையாண்மை அதிகாரத்தை சரியாக பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மக்கள் ஆணையின் ஊடாக சிறந்த ஆட்சிக்கு வழிவகுக்கும் தேர்தலுக்கு தாமதமின்றி பிரவேசிக்க வேண்டும் என சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவரும் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் அவர் விடுத்திருக்கும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கை தற்போது முகம் கொடுத்துள்ள பாரிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், அரசியல் ரீதியாகவும் அராஜக நிலை ஏற்படும் சூழலுக்கு நாட்டை வழி நடத்தினால் ஏற்படக்கூடிய விளைவுகளின் பாரதூரத்தன்மையை நாட்டின் அனைத்து அரசியல் சக்திகளும் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றோம். அதேபோன்று எக்காரணம் கொண்டும் இதுபோன்ற பாரதூர நிலைக்கு நாட்டை கொண்டு செல்ல வேண்டாம் என்று அனைத்து  தரப்புகளிடத்திலும் மன்றாடி கேட்டுக்கொள்கின்றோம்.

சமூக நீதிக்கான தேசிய இயக்கமானது ஜனநாயகம், மக்களின் சுதந்திரம் மற்றும் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் சிவில் சமூக அமைப்பாகும். மேலும், ஜனநாயக  முறைக்கு உட்பட்ட, சட்டத்தின் மேலாதிக்கம் உறுதி செய்யப்பட்ட நேர்மையான ஆட்சி முறையின் ஊடாக மாத்திரமே இலங்கையின் எதிர்காலத்தை பாதுகாக்க முடியும் என்பது எமது அமைப்பின் நம்பிக்கையாகும். 

மேலும் இதற்காக, சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும் இலங்கையின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைக்கு எதிராகவும், மக்கள் பிரதிநிதிகள் பொறுப்புகூறலுடன் அரசாட்சியில் பங்குபெறும் வலுவான பாராளுமன்ற முறையை உருவாக்குவதற்கு ஆதரவாகவும் நாம் குரல் கொடுத்துள்ளோம்.

ஆகையால், தற்போது உருவாகியிருக்கும் சிக்கல்களை சரியாக மதிப்பிட்டு, உருவாகிக்கொண்டிருக்கும் எதிர்மறை சூழ்நிலைகளை மேலும் வளர விடாமல் இருப்பது அரசாங்கத்தின் முக்கிய கடமையாகும். மேலும் இதுபோன்ற நெருக்கடிகள் மத்தியில் நாடு அராஜக பாதையில் செல்வதை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பது எதிர்க்கட்சி உள்ளிட்ட அரசியல் சக்திகளின் பொறுப்பாகும்.

அதற்கமைய இந்த நாட்டில் உருவாகிக் கொண்டிருக்கும் பாரதூரமான நெருக்கடிகளை சரியாக மதிப்பீடு செய்து, பொது இணக்கப்பாட்டின் ஊடாக, மக்களின் இறையாண்மை அதிகாரத்தை சரியாக பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மக்கள் ஆணையின் ஊடாக சிறந்த ஆட்சிக்கு வழிவகுக்கும் தேர்தலுக்கு தாமதமின்றி பிரவேசிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44