கொமர்ஷல் வங்கி மேற்­கொள்ளும் சுற்­றா­ட­லுக்கு நேச­மான நட­வ­டிக்­கைகள் 2015ஆம் ஆண்டில் மிக உறு­தி­யான முன்­னேற்­றத்தைக் கண்­டுள்­ள­தாக வங்கி அறி­வித்­துள்­ளது. அதன் நான்கு கிளை­களில் சூரிய சக்தி பொறி­முறை ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. மேலும் ஐந்து கிளை­க­ளுக்­கான சூரி­ய­சக்தி பொறி­முறை கேள்வி மனுக்கள் கோரப்­பட்­டுள்­ளன. இவை தவிர மேல­தி­க­மாக 20 கட­தாசி பாவ­னை­யற்ற இயந்­தி­ரங்­களும் தரு­விக்­கப்­பட்­டுள்­ளன.

இலங்­கையின் மிகப் பெரிய தனியார் வங்­கி­யான கொமர்ஷல் வங்கி சூரிய சக்தி மூலம் ஏற்­க­னவே 40 கிலோவாட் மின்­சா­ரத்தை பெற்று வரு­கின்­றது. பலாங்­கொடை, பொரளை, நார­ஹேன்­பிட்டி, மக­ர­கம ஆகிய கிளை­களில் இந்த சூரிய சக்தி மின்­சார முறை அமுலில் உள்­ளது. கொள்­ளுப்­பிட்டி, சிற்றி அலு­வ­லகம், பிர­தான வீதி, கம்­பஹா மற்றும் நுகே­கொடை ஆகிய இடங்­க­ளிலும் இந்த முறை அமு­லுக்கு வந்­ததும் சூரிய சக்தி மூலம் பெறப்­படும் மின்­சா­ரத்தின் அளவு 240 கிலோ­வாட்­டாக அதி­க­ரிக்கும்.

இந்தத் திட்­டத்தின் கீழ் வங்கி அதன் சொந்தக் கட்­ட­டத்தில் இயங்கும் மேலும் ஐந்து கிளைகளில் 2016ஆம் ஆண்டில் சூரிய சக்தி முறையை அமுல் செய்யவுள்ளது.