(எம்.ஆர்.எம்.வசீம்)
பணம் இல்லை என தெரிவித்து உள்ளூராட்சி மன்ற தேர்தல் பிற்போடப்பட்டால் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருக்கும் வரைக்கும் எந்த தேர்தலும் இடம்பெறாது.
அதனால் மக்களின் ஜனநாயக உரிமையை பறிப்பதற்கு யாருக்கும் இடமளிக்கக்கூடாது என சுதந்திர மக்கள் கூட்டணியின் செயலாளர் திலங்க சுமத்திபால தெரிவித்தார்.
உள்ளூராட்சிமன்ற தேர்தல் இடம்பெறுமா இல்லையா என்ற சந்தேகம் எழுந்திருப்பது தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி மன்ற தேரதலை பிற்போடுவதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்டன. என்றாலும் எதுவும் கைகூடவில்லை. தற்போது தேர்தல் செலவுக்கு பணம் வழங்குவதற்கு பணம் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.
இந்த காரணத்தை அடிப்படையாக்கொண்டு தேர்தல் பிற்போடப்பட்டால் ஜனாதிபதி தேர்தலோ பாராளுமன்ற தேர்தலோ இடம்பெறாது.
தேர்தல் நடத்துவதற்கு பணம் இல்லை என தேர்தல் நடத்துவதற்கு பாெறுப்பான நிறுவனம் தெரிவிப்பதாக இருந்தால் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருக்கும் வரைக்கும் எந்த தேர்தலும் இடம்பெறாது.
அதனால் மக்களின் ஜனநாயக உரிமையான வாக்களிக்கும் உரிமையை பறிப்பதற்கு யாருக்கும் இடமளிக்க முடியாது.
அத்துடன் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தேவையான அனைத்து கடதாசிகளும் தற்போது போதுமாளவு இருப்பதாகவும் தேர்தலுக்கு தேவையான பத்திரங்கள் இதுவரைக்கும் அதிகமான மாவட்டங்களுக்கு அச்சிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
குறிப்பாக 7மாவட்டங்களுக்கு தேவையான தபால் வாக்குச்சீட்டுக்கள் அச்சிடப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக பிரதானி தெரிவித்திருக்கிறார்.
எனவே பணம் இல்லை என்ற காரணத்துக்காக உள்ளூராட்சி மன்ற தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கத்துக்கு இடமளிக்கக்கூடாது. தேர்தல் ஆணைக்குழு இது தொடர்பாக சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM