திருகோணமலை பிரதேசத்தில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பெண்ணொருவரின் தங்கச்சங்கிலியை அபகரித்துவிட்டு முச்சக்கரவண்டியில் தப்பிச்சென்ற நபரே இவ்வாறு துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

திருகோணமலை - சர்தாபுர பகுதியில் பெண்ணொருவரின் தங்கச்சங்கிலியை அபகரித்துவிட்டு பொலிஸாரின் கட்டளையை மீறி தப்பிச்சென்றபோது, பொலிஸார் பின்தொடர்ந்து சென்று மேற்கொண்ட தாக்குதலின் போது குறித்த இளைஞர் பலியாகியுள்ளார்.

உயிரிழந்த இளைஞர் 28 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் தப்பிச்சென்ற மேலும் இருவரை பொலிஸார் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.