இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு 231 ஓட்டங்கள் இலக்கு : மெத்யூஸ் பிரகாசிக்கத் தவறினார்

Published By: Digital Desk 5

15 Feb, 2023 | 03:04 PM
image

(கெத்தாரமவிலிருந்து நெவில் அன்தனி)

கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான முதலாவது உத்தியோகப்பற்றற்ற சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி 45.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 230 ஓட்டங்களைப் பெற்றது.

அணித் தலைவர் சதீர சமரவிக்ரம 74 ஓட்டங்களையம் சஹான் ஆரச்சிகே 57 ஓட்டங்களையும் சாமிக்க கருணாரட்ன 52 ஓட்டங்களையும் பெற்றனர்.

இலங்கை அணி ஒரு கட்டத்தில் 4 விக்கெட்களை இழந்து 25 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தடுமாறியது. எனினும் சமரவிக்ரமவும் ஆரச்சிகேயும் 5ஆவது விக்கெட்டில் 119 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை ஏ அணியை மீட்டனர்.

இப் போட்டியில் விளையாடும் பிரதான வீரர்களான ஏஞ்சலோ மெத்யூஸும் அவிஷ்க பெர்னாண்டோவும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர்.

மெத்யூஸ் 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். ஆரம்ப வீரராக களம் இறங்கிய அவிஷ்க பெர்னாண்டோ ஓட்டம் பெறாமல் வெளியேறினார்.

லயன்ஸ் பந்துவீச்சில் சக்கிப் மஹ்மூத் 27 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். 231 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இங்கிலாந்து லயன்ஸ் பதிலுக்கு துடுப்பெடுத்தாடுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31