நியுசிலாந்தை தாக்கியுள்ள கப்பிரியல் சூறாவளி காரணமாக பலர் காணாமல்போயுள்ள நிலையில் அவர்கள் குறித்த கரிசனைகள் அதிகரித்துள்ளன.
நியுசிலாந்து பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.
நியுசிலாந்தில் பலத்த சேதங்களை ஏற்படுத்தியுள்ள சூறாவளி அங்கிருந்து நகர்ந்துகொண்டுள்ள நிலையில் ஒரு குழந்தை உட்பட நால்வர் உயிரிழந்துள்ளதாகவும் பத்தாயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
1440 பேர் காணாமல்போயுள்ளனர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்- அவர்களில் பலர் கண்டுபிடிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை காணப்படுகின்றது.
பலர் காணாமல்போயுள்ளனர் அவர்களின் நிலைமை குறித்து காவல்துறையினர் கடும் கவலை கொண்டுள்ளனர் என நியுசிலாந்து பிரதமர் கிறிஸ் ஹிப்கின்ஸ் தெரிவித்துள்ளார்.
ஹவ்க்ஸ்பே எஸ்க்டேல் பகுதியில் குழந்தையின் உடல் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகரித்த வெள்ளநீரில் சிக்கியே குழந்தை உயிரிழந்துள்ளது.
இயற்கை அனர்த்தம் காரணமாக உயிரிழந்தவர்களின் துயரம் நினைத்துப்பார்க்க முடியாதது என பிரதமர் தெரிவித்துள்ளார்.
நோர்த் ஜலண்டின் சில பகுதிகள் மின்சாரம் தொடர்பாடல்கள் முற்றாக துண்டிக்கப்பட்ட பகுதியில் காணப்படுகின்றன - இதனால் மதிப்பீடுகளை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படுகின்றது.
வீதிகளும் வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன மண்சரிவு வீதிகள் சேதமடைந்துள்ளதால் முக்கிய வீதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன,
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM