பொருளாதார நெருக்கடிக்கு ஒப்பீட்டளவில் தீர்வுகண்டவுடன் தேர்தல் - செஹான் சேமசிங்க

Published By: Digital Desk 5

15 Feb, 2023 | 11:46 AM
image

(இராஜதுரை ஹஷான்)

நிதி நெருக்கடிக்கு மத்தியில் நாணயம் அச்சிட்டு தேர்தலை நடத்தினால் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை உரிய காலப்பகுதியில் நிதியுதவியை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்படும்.

பொருளாதார நெருக்கடிக்கு ஒப்பீட்டளவில் தீர்வு கண்டவுடன் தேர்தலை நடத்துவது அரசாங்கத்தின் பிரதான இலக்காக உள்ளது என நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார்.

உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் வினவிய போது போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுக்க தேர்தல்கள் ஆணைக்குழு கோரும் பெருந்தொகையான நிதியை ஒதுக்க முடியாத நிலை காணப்படுகிறது.

பல மில்லியன் கணக்கான நிதியை ஒரே கட்டத்தில் ஒதுக்கும் போது அரச சேவைகளுக்கு தேவையான நிதியை ஒதுக்குவதில் பாதிப்பு ஏற்படும்.

நிதி நெருக்கடிக்கு மத்தியில் தேர்தலுக்கு நிதி ஒதுக்கினால் அரச சேவையாளர்களுக்கு சம்பளம் மற்றும் நலன்புரி சேவைகளுக்கு நிதி ஒதுக்குவது சிக்கலாகும்,அது சமூக கட்டமைப்பில் பாரிய நெருக்கடிகளை ஏற்படுத்தும்.

அரசாங்கம் என்ற ரீதியில் தற்போது மக்களின் அடிப்படை தேவைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு.

ஒரு மாதத்திற்கு தேவையான அரச செலவுகளை ஈடு செய்வதற்கு பாரிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ள பின்னணியில் நாணயம் அச்சிட்டு தேர்தலை நடத்தினால் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதில் பாதிப்பு ஏற்படும்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை எதிர்வரும் மாதம் 31 ஆம் திகதிக்குள் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்.

கடன் குறித்து வெள்ளிக்கிழமை சர்வதேச நாணய நிதியம்,உலக வங்கி மற்றும் இந்தியா கூட்டிணைந்து நடத்தும் வட்டமேசை மாநாடு இலங்கைக்கு சாதகமாக அமையும்.

பொருளாதார நெருக்கடிக்கு ஒப்பீட்டளவில் தீர்வு கண்டவுடன் தேர்தலை நடத்துவது அரசாங்கத்தின் பிரதான இலக்காக உள்ளது.பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் தேர்தலை நடத்தினால் பொருளாதார பாதிப்பு மேலும் பாதிப்பு ஏற்படும் போது அதற்கு யார் பொறுப்பு கூறுவது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

களுத்துறை தேவாலயத்தில் பெறுமதியான சிலைகள் திருட்டு...

2025-01-22 12:36:59
news-image

திருகோணாமலை - மூதூரின் தாழ் நிலப்பகுதிகள்...

2025-01-22 12:44:35
news-image

இலங்கையில் சமத்துவம், உண்மை, நீதிக்கான முயற்சிகளை...

2025-01-22 12:18:15
news-image

உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் ஐவர் கைது

2025-01-22 12:11:13
news-image

மூடப்பட்ட கண்டி - மஹியங்கனை பிரதான...

2025-01-22 12:41:05
news-image

பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய நால்வர்...

2025-01-22 11:43:15
news-image

வடக்கில் கடந்த வருடம் 34 படுகொலைகள்...

2025-01-22 11:46:04
news-image

ரயில் மோதி நபரொருவர் காயம்!

2025-01-22 12:01:49
news-image

யாழில் காய்ச்சலால் 4 வயது சிறுமி...

2025-01-22 11:08:55
news-image

தேங்காய் தட்டுப்பாடு ; அரசாங்க தலையீட்டை...

2025-01-22 12:46:42
news-image

நாட்டை கட்டியெழுப்ப விரும்பியோ விரும்பாமலோ சில...

2025-01-22 10:57:45
news-image

மின்சாரம் தாக்கி 14 வயதுடைய சிறுவன்...

2025-01-22 11:08:50