காதலர் தினத்தை பசு காதல் தினமாக கொண்டாடிய இந்திய அமைச்சர்

Published By: T. Saranya

15 Feb, 2023 | 09:39 AM
image

காதலர் தினத்தை இந்திய அமைச்சர் பசு காதல் தினமாக கொண்டாடியுள்ளார். 

உலக அளவில் காதலர் தினம் கொண்டாடப்படும் பிப்ரவரி 14 ஆம் திகதியை பசு அணைப்பு தினமாக கொண்டாட வேண்டுமென இந்திய விலங்குகள் நல சபை அறிவித்தது. 

எனினும், இது சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியதை தொடர்ந்து, இந்திய விலங்குகள் நல சபை தனது அறிவிப்பை திரும்பப்பெற்றது. 

இந்நிலையில் நேற்று உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், உத்தரபிரதேசத்தின் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் தர்மபால் சிங் நேற்றைய தினத்தை பசு காதல் தினமாக கொண்டாடியுள்ளார். 

பசுக்களுக்கு வெல்லம், ரொட்டி போன்றவற்றை வழங்கி பசு காதல் தினத்தை கொண்டாடிய அவர், பசுக்களை நமது தாயாக கருத வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். 

இதுகுறித்து அவர் தெரிவிக்கையில்,

 "நமக்கு 3 தாய்கள் உள்ளனர். முதலில் நம்மைப் பெற்றெடுக்கும் நமது தாய், 2-வது பசு தாய், 3-வது பாரத தாய். முதல் அன்பு நம் தாய் மீது இருக்க வேண்டும். பிறகு பசு தாய் மற்றும் பாரத தாய்க்கு நமது மரியாதையை செலுத்த வேண்டும். பசுவின் சாணம் மற்றும் சிறுநீரை விட உலகில் சிறந்தது எதுவும் இல்லை. என்னை போலவே அனைத்து மக்களும் காதலர் தினத்தை பசு காதல் தினமாக கொண்டாட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொலை வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்துக்குள் நுழைந்த...

2023-03-23 16:20:47
news-image

லொத்தரில் 11 கோடி ரூபாவை வென்ற...

2023-03-22 16:12:31
news-image

என்ன ஒரு துணிச்சல்...! முதலையை விரட்டியடித்த...

2023-03-18 16:35:26
news-image

லொறிகளை வழிமறித்து கரும்பைச் சுவைத்த காட்டு...

2023-03-09 13:02:12
news-image

கேரட்டை இசைக்கருவியாக மாற்றிய அவுஸ்திரேலிய இசைக்கலைஞர்

2023-03-07 16:49:45
news-image

பிரபல மொடல் நயோமி கம்பெல் தன்னுடன்...

2023-03-04 16:12:09
news-image

முள்ளம்பன்றியும் மாக்பி பறவையும்

2023-02-24 14:57:51
news-image

மனைவி மீது கொண்ட காதலை விசித்திரமான...

2023-02-22 10:38:10
news-image

மட்டுநகர் வாவியில் வெளிநாட்டுப் பறவைகள்

2023-02-21 16:25:38
news-image

காதலர் தினத்தில் கின்னஸ் உலக சாதனை...

2023-02-17 10:59:27
news-image

காதலர் தினத்தை பசு காதல் தினமாக...

2023-02-15 09:39:03
news-image

இணையவழி விற்பனை : பாண் பக்கற்றில்...

2023-02-14 10:35:07