காதலர் தினத்தை முன்னிட்டு இன்று (14) மாலை 6.30 மணியளவில் யாழ்ப்பாணம் TILKO ஹோட்டலில் மாபெரும் இசைத்திருவிழா நடைபெறுகிறது.
இதில் தென்னிந்திய நட்சத்திர நடிகர்களான வில்லன் நடிகர் சாய்தீனா, நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான ரோபோ சங்கர் மற்றும் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் பிரியங்கா சங்கர், 'பிகில்' திரைப்படத்தின் ஊடாக பாண்டியம்மாவாக பிரபலமான இந்திரஜா சங்கர், நடிகையும் விஜய் டிவி பிரபலமுமான ஸ்ருதிகா அர்ஜூன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பிக்கவுள்ளனர்.
மேலும், இசைப் பங்களிப்பு வழங்குவதற்காக தென்னிந்திய பிரபலங்களான பூவையார், அஜய் கிருஷ்ணா, ஶ்ரீ நிஷா உட்பட பல பாடகர்களும் வருகை தந்துள்ளனர்.அத்துடன் இளம்தலைமுறையின் தாயக கலைஞர்களான RAP CEYLON குழு, வாகீசன் இராசையா, திசோன், ஆத்விக் மற்றும் இன்னும் பல ஈழத்து பாடகர்களான ரமணன், வாசினி, பானு, தீபன், கில்மிஷா, ரகு பிரணவன், வீனா, போன்றோருடன் இணைந்து SN இசைக்குழுவை சேர்ந்த ஶ்ரீ நிர்மலனும் சங்கமிக்கும் மாபெரும் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த இசை நிகழ்வில் கலந்துகொள்ளும் காதலர்களுக்கு குலுக்கல் சீட்டு முறையில் வெற்றியாளர்களை தெரிவுசெய்து 3 சிறப்பு காதல் ஜோடிகளுக்கும், 15 காதல் ஜோடிகளுக்கும் பெறுமதிமிக்க பரிசில்கள் வழங்கப்படுகின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM