நட்சத்திர அந்தஸ்துக்கு கவின் உயர்வார் - தயாரிப்பாளர் அம்பேத்குமார்

Published By: Ponmalar

14 Feb, 2023 | 05:31 PM
image

'நடிகர் கவின் நட்சத்திர நாயகனான சிவகார்த்திகேயன் அளவிற்கு உச்சத்தை தொடுவார்' என 'டாடா' படத்தின் தயாரிப்பாளர் அம்பேத்குமார் நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் கணேஷ் கே. பாபு இயக்கத்தில் நடிகர் கவின்- அபர்ணா தாஸ் நடிப்பில் பெப்ரவரி 10ஆம் திகதியன்று வெளியான திரைப்படம் 'டா டா'.

இந்தப் படம் படமாளிகையில் வெளியாகி, நேர்நிலையான விமர்சனகளால், ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் இந்தப் படத்தை வெற்றி படமாக்கிய ரசிகர்களுக்கும், ஊடகவியலாளர்களுக்கும், பத்திரிக்கையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டலில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பங்கு பற்றி படத்தின் நாயகனான கவின் பேசுகையில், '' இந்த படத்திற்கு தொழில்நுட்ப கலைஞர்கள் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை வழங்கியிருக்கிறார்கள். இதற்காக அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இயக்குநர் உள்ளிட்ட படத்தில் பணியாற்றிய அனைவரும் நண்பர்களாக பணியாற்றினோம். இசையமைப்பாளர் ஜென்னிடம் நான்கு பாடல்கள் மட்டும் தான் என்று கூறி, அவரிடமிருந்து ஒன்பது பாடல்களை பெற்றிருக்கிறோம். அவரும் இதற்காக ஆத்மார்த்தமாக உழைத்தார்.

படப்பிடிப்பு தருணத்தின் போது நிகழ்ந்த ஒரு தொழில்நுட்ப தவறு காரணமாக சில காட்சிகளை மீண்டும் படமாக்க இயலாத சூழல் இருந்தது.

இந்நிலையில் தயாரிப்பு செலவு அதிகரிக்கக் கூடாது என்பதற்காக, இயக்குநர் உள்ளிட்ட அனைவரும் அந்த காட்சி திரையில் இடம்பெற வேண்டும் என்பதற்காக புதிதாக சிந்தித்து காட்சிகளை உருவாக்கினோம். இந்தக் காட்சி பட மாளிகையில் ரசிகர்களால் உற்சாகமாக கைத்தட்டி வரவேற்றபோது, எங்களுடைய உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரமாக உணர்ந்தோம்.'' என்றார்.

தயாரிப்பாளர் அம்பேத்குமார் பேசுகையில், '' மனங்கொத்தி பறவை என்ற படத்தில் சிவகார்த்திகேயனை நடிக்க வைக்கலாம் என்று தீர்மானித்து, படப்பிடிப்பு நடத்தினோம். பட குழுவினரிடம், 'இந்த திரைப்படம் வெற்றி பெறும். வெற்றி விழாவை நட்சத்திர ஹொட்டேலில் கொண்டாடுவோம்' என உறுதியுடன் தெரிவித்தேன்.

அதேபோல் அந்தத் திரைப்படம் வெற்றி பெற்று வெற்றி விழாவை நட்சத்திர ஹொட்டேலில் கொண்டாடினோம். அதேபோல் 'டாடா' திரைப்படத்தையும் பார்த்துவிட்டு கவினிடம், ''நீங்கள் சிவகார்த்திகேயன் போல் நட்சத்திர அந்தஸ்தை விரைவில் எட்டுவீர்கள். இந்தப் படத்தின் வெற்றி விழாவையும் அதே நட்சத்திர ஹோட்டலில் கொண்டாடுவோம்'' என்றேன்.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் அதே நட்சத்திர ஹொட்டேலில் 'டாடா' படத்தின் வெற்றி விழா நடைபெறுகிறது. கவின் நடித்த 'லிப்ட்' திரைப்படத்தை பார்த்த பிறகு, 'அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும்' என கேட்டுக் கொண்டேன். அவரும் பொருத்தமான கதை அமைந்தவுடன் தொடர்பு கொள்கிறேன் என்று சொன்னார். அவருடைய நண்பர்களுடன் இணைந்து 'டாடா' படத்தை உருவாக்கி, வெற்றியையும் அளித்திருக்கிறார்'' என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35