'சினிமாவில் யாரையும் எதிரியாக பார்க்கவில்லை. நான் பார்த்த.. சந்தித்த.. அனுபவித்த.. கேள்விப்பட்ட.. விடயங்களை மட்டுமே படைப்பாக உருவாக்குகிறேன்' என 'பகாசூரன்' படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான மோகன் ஜி தெரிவித்திருக்கிறார்.
இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் மற்றும் ஒளிப்பதிவாளரும், நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ் என ஆகிய இருவரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் 'பகாசூரன்' எனும் திரைப்படம் பெப்ரவரி 17ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் வெளியாகிறது.
இதனை 'ஜி. டி. எம்' எனும் வெளியீட்டு நிறுவனத்தை தொடங்கி இருக்கும் விநியோகஸ்தரான கௌதம் தமிழகம் முழுவதும் பட மாளிகையில் வெளியிடுகிறார். இந்நிறுவனத்தின் இலச்சினையை அறிமுகப்படுத்தும் விழா சென்னையில் நடைபெற்றது.
இவ்விழாவில் இயக்குநரும், தயாரிப்பாளருமான மோகன் ஜி பேசுகையில், ''செல்வராகவன் அமைதியானவர். அதிகம் பேச மாட்டார் என அனைவரும் சொன்னார்கள்.
ஆனால் நானும், செல்வராகவனும் நிறைய பேசியிருக்கிறோம். படப்பிடிப்பு தளத்தில் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் அவருடைய அனுபவங்களை கேட்டிருக்கிறேன். அவரது இயக்கத்தில் வெளியான 'காதல் கொண்டேன்' எனும் திரைப்படத்தை பார்த்து தான் இயக்குநராக வேண்டும் என்ற எண்ணமே உதித்தது.
'ஜப் வி மெட்' எனும் ஹிந்தி திரைப்படத்தை பார்த்துவிட்டு நட்டி என்கிற நட்ராஜுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்பி இருக்கிறேன்.
இந்த இரண்டும் 'பகாசூரன்' படத்தில் சாத்தியப்பட்டிருக்கிறது. 'பகாசூரன்' யார்? என்பது படம் வெளியான பிறகு அனைவருக்கும் தெரியும். ஏனெனில் இது அனைவருக்குமான படம். நான் ஒரு பிரிவினரை எதிர்த்து திரைப்படத்தை உருவாக்குவதாக சொல்கிறார்கள்.
அதற்காக நான் சினிமாவிற்கு வரவில்லை. சினிமாவில் யாரையும் நான் எதிரியாக பார்க்கவில்லை. நான் பார்த்த.. அனுபவித்த.. சந்தித்த.. கேள்விப்பட்ட.. விடயங்களை தான் படைப்பாக உருவாக்குகிறேன். சமூகத்திற்கு சமநிலையை ஏற்படுத்தும் வகையிலான படங்களை தொடர்ந்து இயக்கிக் கொண்டே இருப்பேன்.'' என தெரிவித்தார்.
முன்னதாக 'பகாசூரன்' படத்தை வெளியிடும் விநியோக நிறுவனத்தின் இலட்சினையை நடிகர் ரிஷி ரிச்சர்ட் வெளியிட்டார்.
'பகாசூரன்' திரைப்படத்தின் இரண்டு பாடல்கள், முன்னோட்டம் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. பெப்ரவரி 17 ஆம் திகதியன்று வெளியாகும் இந்த திரைப்படத்திற்கு வட தமிழகத்தில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என திரையுலக வணிகர்கள் அவதானிக்கிறார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM