மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவு

Published By: Digital Desk 3

14 Feb, 2023 | 04:56 PM
image

(செய்திப்பிரிவு)

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு  தொடர்பில்  இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் மின்சார சபை இணைந்து நேற்று திங்கட்கிழமை நடத்திய கலந்துரையாடல் இணக்கப்பாடு இன்றி நிறைவடைந்ததாக இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள்  தேசிய பேரவைக்கு அறிவித்தனர்.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இரண்டு தரப்பினரும் கூடிக் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுக்குமாறு நேற்று கூடிய தேசிய பேரவை அறிவித்திருந்தது. அதற்கமைய இவ்விடயம் தொடர்பில் இலங்கை  பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை மின்சார சபை அதிகாரிகள் சந்தித்துக் கலந்துரையாடியதாகவும் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்க முடியாமல் போனதாகவும்  மின்சார சபை  அதிகாரிகள்  தேசிய பேரவைக்கு அறிவித்தனர்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதமர்  தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையில்  பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று தேசிய பேரவை  கூடிய போது இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிடுகையில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான இறுதித் தீர்மானத்தை 15 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிப்பதாக இதற்கு முன்னர் தேசிய பேரவை கூடிய போது பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு பேரவைக்கு அறிவித்ததாகவும் அதனால் நாளை (15)  இது தொடர்பில் தீர்மானமொன்று எடுக்கப்படும் என தான் நம்புவதாகக் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியா – பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரை...

2026-02-13 10:22:29
news-image

வாழைச்சேனையில் காட்டு யானை அட்டகாசம்: ஒருவர்...

2026-02-13 10:14:01
news-image

மருந்துத் தட்டுப்பாட்டைத் தவிர்க்க வைத்தியசாலை மட்டத்தில்...

2026-02-13 10:27:10
news-image

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கு நீர் வழங்கல்...

2026-02-13 09:58:53
news-image

போதைப்பொருள் சுற்றிவளைப்பு: 'ஐஸ்' போதைப்பொருளுடன் மூவர்...

2026-02-13 08:55:58
news-image

பெருந்தோட்டப் பகுதிகளில் சிறுவர் பாதுகாப்பிற்காக விசேட...

2026-02-13 09:47:49
news-image

உயிர்த்த ஞாயிறு வழக்கு: விசேட மேல்...

2026-02-13 09:29:44
news-image

சிரேஷ்ட அரசியல்வாதி திஸ்ஸ விதாரண காலமானார்!

2026-02-13 09:15:32
news-image

திருமலை, காங்கேசன்துறை துறைமுகங்களை இந்தியாவுக்கு தாரைவார்க்க...

2026-02-13 09:33:35
news-image

கொழும்பில் விபச்சார விடுதி சுற்றிவளைப்பு :...

2026-02-13 09:06:33
news-image

மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள்...

2026-02-13 09:05:24
news-image

எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து காலத்தை வீணடிக்க...

2026-02-13 09:25:17