(எம்.ஆர்.எம்.வசீம்)
தேர்தல் செலவுகளுக்கான பணத்தை பெற்றுக்கொள்வது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு திறைசேரியின் செயலாளருடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
என்றாலும் இந்த கலந்துரையாடலை தேர்தல் ஆணைக்குழு தவிர்த்து வருகிறது என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நவீன் திஸாநாயக்க தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
தேர்தல் மக்களின் அடிப்படை உரிமை. அது நடத்தப்படவேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே ஐக்கிய தேசிய கட்சி இருக்கிறது.
என்றாலும் தற்போதுள்ள பொருயாதார நெருக்கடி நிலையில் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைக்கே ஜனாதிபதி முன்னுரிமை வழங்கி செயற்படுகிறார்.என்றாலும் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்க இருக்கும் பணத்தை பாதுகாத்துக்கொள்ளவேண்டி இருக்கிறது.
நாட்டின் அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்க வேண்டி இருக்கிறது. இந்த அனைத்து நடவடிக்கைகளையும் ஜனாதிபதி தனியாக இருந்தே செய்யவேண்டி இருக்கிறது.
ஏனெனில் நாட்டை கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தார். ஒரு சிலரே ஜனாதிபதியுடன் கைகோர்த்தனர்.
என்றாலும் தனது அரசியல் அனுபவம் மற்றும் திறமையால் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அத்துடன் மக்களின் வாக்குரிமையை மதிக்கவேண்டும். அதனால் தேர்தலுக்கு ஐக்கிய தேசிய கட்சி தயாராகவே இருக்கிறது.
என்றாலும் தற்போதுள்ள பிரச்சினை பணம் இல்லாமையாகும். தேர்தல் ஆணைக்குழு 3பி்ல்லியன் திறைசேரியிடம் கோரி இருக்கிறது.
அதனால் தேர்தல் செலவுகளுக்கு பணத்தை எவ்வாறு பெற்றுக்கொள்வது தொடர்பாக திறைசேரியுடன் கலந்துரையாடுமாறு தேர்தல் ஆணைக்குழுவுக்கு நாங்கள் பல தடவைகள் தெரிவித்திருக்கிறோம். ஆனால் இதுவரை அந்த கலந்துரையாடல் இடம்பெறவில்லை.
தேர்தல் ஆணைக்குழு கோரும் பணத்தை ஒரே தடவையில் வழங்குவதற்கு திறைசேரிக்கு முடியாமல் இருக்கலாம். அதனால் அந்த பணத்தை கட்டம் கட்டமாக வழங்க முடியுமாக இருக்கும் என்றே நான் நினைக்கிறேன். அதனால்தான் இது தொடர்பாக கலந்துரையாடுமாறு தெரிவிக்கிறோம்.
அத்துடன் வாக்குச்சீட்டுக்களை அச்சிடுவதற்கு தேவையான பணம் இல்லாமல் அச்சிட முடியாது என அரசாங்க அச்சகம் தெரிவித்திருக்கிறது.
அப்படியானால் தேர்தலை எவ்வாறு நடத்துவது?. என்றாலும் திறைசேரியுடன் கலந்துரையாட தேர்தல் ஆணைக்குழு தவிர்த்து வருகிறது.
ஐக்கிய தேசிய கட்சியை பொறுத்தவரை, வெற்றி, தோல்வி எதுவாக இருந்தாலும் தேர்தலுக்கு முகம்கொடுக்க ஒரு போதும் பின்வாங்கியது இல்லை. என்றாலும் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ஓரளவேனும் தீர்வு காண ஜனாதிபதிக்கு இன்னும் 6மாதங்களாவது கால அவகாசம் வழங்க வேண்டும். அதன் பின்னர் தேர்தலுக்கு செல்ல முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM