எம்.சி.நஜிமுதீன்)

அம்பாந்தோட்டை துறைமுக விற்பனை தொடர்பிலான உடன்படிக்கையில் அப்பிரதேசத்தின் பாதுகாப்பிற்கான பொறுப்புடமையும் சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இது நாட்டின் இறைமையை சவாலுக்குட்படுத்தும் விடயமாகும் என முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடு செய்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.