இந்த வரு­டத்தில் உல­கெங்கும் மொத்தம் 110 ஊட­க­வி­ய­லா­ளர்கள் உயி­ரி­ழந்­துள்ள­தாக எல்­லை­க­ளற்ற செய்­தி­யா­ளர்கள் அமைப்பு நேற்று தெரி­வித்­தது.

இதன் பிர­காரம் இந்த வரு­டத்தில் 67 ஊட­க­வி­ய­லா­ளர்கள் தமது கட­மையின் போது கொல்­லப்­பட்­டுள்­ளனர். அதே­ச­மயம், 43 ஊட­க­வி­ய­லா­ளர்கள் என்­ன­வென்று அறி­யப்­ப­டாத சூழ்­நி­லை­களின் கீழ் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.

அத்­துடன் இந்த வரு­டத்தில் 27 உத்­தி­யோ­க­பூர்­வ­மற்ற ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளாக சேவை­யாற்­றிய பொது­மக்­களும் 7 ஏனைய ஊடக நிறு­வன பணி­யா­ளர்­களும் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.

அதி­க­ளவில் ஊட­க­வி­ய­லா­ளர்­களின் மர­ணங்கள் இடம்­பெற்ற நாடாக சிரியா உள்­ளது. அங்கு இந்த வரு­டத்தில் கட­மையின் போது 13 ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர்.

சிரி­யா­வுக்கு அடுத்த இடத்தில் பெரு­ம­ளவு ஊட­க­வி­ய­லா­ளர்­களின் மர­ணங்­களைச் சந்­தித்த நாடாக பிரான்ஸ் உள்­ளது. அந்­நாட்டில் 9 ஊட­க­வி­ய­லா­ளர்கள் தமது கட­மையின் போது கொல்­லப்­பட்­டுள்­ளனர்.

கடந்த ஜன­வரி மாதம் பிரான்ஸின் பாரிஸ் நக­ரி­லுள்ள சார்ளி ஹெப்டோ சஞ்­சிகை அலு­வ­லகம் மீது நடத்­தப்­பட்ட தாக்­குதல் பிரான்­ஸி­லான ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளது மர­ணங்­களில் அதி­க­ரிப்பு ஏற்­ப­டு­வ­தற்கு கார­ண­மாக அமைந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

அதே­ச­மயம் ஊட­க­வி­ய­லா­ளர்கள் பாது­காப்பு சபையால் (சி்.பி.ஜெ.) வெளி­யி­டப்­பட்­டுள்ள ஊட­க­வி­ய­லா­ளர்கள் மர­ணங்கள் தொடர்­பான அறிக்­கை­யா­னது, கடந்த வரு­டத்தில் கட­மையின் போது 69 ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக கூறு­கி­றது.

மேலும் சி.பி.ஜெ. இன் அறிக்கை என்­ன­வென்று அறி­யப்­ப­டாத சூழ்­நி­லை­களின் கீழ் குறைந்­தது 26 பேர் பலி­யா­கி­யுள்­ள­தாக குறிப்­பிட்­டுள்­ளது. இது எல்­லை­க­ளற்ற செய்­தி­யா­ளர்கள் அமைப்பால் வெளி­யி­டப்­பட்ட தொகை­யிலும் 17 குறை­வாகும்.

உல­க­ளா­விய ரீதியில் கொல்­லப்­பட்ட ஊட­க­வி­ய­லா­ளர்­களில் சுமார் 28 பேர் (40 சத­வீதம்) ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களால் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக சி.பி.ஜெ. தெரி­விக்­கி­றது.

மேற்­படி ஊட­க­வி­ய­லா­ளர்கள் மர­ணங்கள் தொடர்­பான தர­வு­க­ளா­னது கடந்த ஜன­வரி முதலாம் திக­திக்கும் இந்த மாதம் 23 ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட காலப் பகு­தியில் இடம்­பெற்ற மர­ணங்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

கடந்த ஆண்டில் 66 ஊட­க­வி­ய­லா­ளர்கள் மரணமாகியுள்ள நிலையில் இந்த வருடத்தில் அந்தத் தொகையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை இந்தத் தரவுகள் சுட்டிக் காட்டுவதாக உள்ளதென எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்பு தெரிவிக்கிறது.

2005 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை கடமையின் போது 787 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது.