10 வருடங்களின் பின் முதல் தடவையாக சிரியாவில் சவூதி விமானம் தரையிறங்கியது

Published By: Sethu

14 Feb, 2023 | 03:05 PM
image

பூகம்பத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணப் பொருட்களை ஏற்றிச்சென்ற சவூதி அரேபிய விமானமொன்று சிரியாவில் இன்று தரையிறங்கியது. 

சவூதி அரேபிய விமானமொன்று சிரியாவில் தரையிறங்கியமை இதுவே முதல் தடவையாகும்.

கடந்த 6ஆம் திகதி துருக்கியில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் பூகம்பத்தினால் துருக்கி மற்றும் சிரியாவில் 35,000 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், சிரியாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 35 தொன் உணவுப பொருட்களை ஏற்றிச் சென்ற சவூதி அரேபிய விமானம் சிரியாவின் அலேப்போ சர்வதேச விமான நிலையத்தில் இன்று தரையிறங்கியதாக சிரிய அரசின் செய்தி நிறுவனமொன்று தெரிவித்துள்ளது. 

இதற்குமுன் இறுதியாக 2012 ஆம் ஆண்டு சவூதி விமானமொன்று சிரியாவில் தரையிறங்கியிருந்தது.

சவூதி அரேபியாவின் மேலும் இரு விமானங்கள், புதன், வியாழக்கிழமைகளில் சிரியாவை வந்தடையும் என துருக்கியின் போக்கவரத்து அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாராளுமன்றத்தை கலைத்தார் ஜப்பான் பிரதமர் :...

2026-01-23 13:31:08
news-image

பிலிப்பைன்ஸ் நாட்டவர்கள் பயணித்த கப்பல் விபத்து...

2026-01-23 12:26:05
news-image

டிக்டொக் தடையிலிருந்து தப்பியது : அமெரிக்க...

2026-01-23 09:44:53
news-image

ஜப்பானில் உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையம்...

2026-01-23 10:16:18
news-image

அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு ; மூன்று...

2026-01-22 15:52:45
news-image

உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறியது...

2026-01-22 14:59:47
news-image

பீஜிங், டெல்லி, நியூயோர்க் உள்ளிட்ட நகரங்கள்...

2026-01-22 13:18:55
news-image

காசாவில் இஸ்ரேலிய தாக்குதலில் 3 ஊடகவியலாளர்கள்...

2026-01-22 12:42:54
news-image

ஓய்வு பெற்றார் நாசா விண்வெளி வீராங்கனை...

2026-01-22 12:50:51
news-image

கிரீன்லாந்து விவகாரம்: ஐரோப்பிய நாடுகள் மீதான...

2026-01-22 10:47:20
news-image

பாகிஸ்தானில் வணிக வளாக தீ விபத்தில்...

2026-01-22 10:24:36
news-image

இந்தோனேசியாவில் உலகின் மிகப்பழைமையான குகை ஓவியம்...

2026-01-22 09:48:41