காதலர் தினமான இன்று (14) சிறார்களையும் இளைஞர்களையும் குறிவைத்து பேஸ்புக் ஊடாக விருந்துபசாரங்களை ஏற்பாடு செய்தல் போன்ற செயற்பாடுகள் தொடர்பில் பொலிஸார் விழிப்புடன் இருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.
விருந்துபசாரங்களை ஏற்பாடு செய்வதற்கும் கலந்து கொள்வதற்கும் தடை இல்லையெனினும் கடந்த ஆண்டுகளில் கிடைத்த அனுபவங்களின் அடிப்படையில் பொலிஸார் உஷார் நிலையில் உள்ளனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
பேஸ்புக் போன்ற சமூக ஊடக தளங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்படும் விருந்துபசாரங்கள் மற்றும் நிகழ்வுகளை கண்காணித்து சுற்றிவளைத்து சோதனையிடவும் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
"விருந்துபசாரங்களில் கலந்து கொள்வதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால் அதில் பங்கேற்பவர்கள் போதைப்பொருட்களைப் பயன்படுத்துகிறார்களா என்பதனைக் கண்டறியவே பொலிஸாரின் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM