(எம்.ஆர்.எம்.வஸீம்)

அடுத்தவருடம் தேசிய அரசாங்கத்துக்கு தீர்மானமிக்க வருடமாக  ஏற்படப்போகின்றது. அதனால்தான் அரசாங்கம் தேர்தலை திட்டமிட்டு பிற்பபோட்டு வருகின்றது என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

அரசாங்கம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிலையில் அரசாங்கம் உள்ளூராட்சி மன்ற தேர்தலை திட்டமிட்டே பிற்படுத்தி வருகின்றது.அரசாங்கம் தேர்தலை நடத்தினால் படுதோல்வியடையும் என்பது நிச்சயமாகும் என்றார்.