சிங்கிள் ஊழியர்களுக்கு காதலர் தினத்தில் 3 மடங்கு ஊதியம் வழங்கும் பிலிப்பைன்ஸ் மேயர்

Published By: Sethu

14 Feb, 2023 | 12:20 PM
image

வாழ்க்கைத் துணையின்றி தனியாக வாழும் 'சிங்கிள்' ஊழியர்களுக்கு, காதலர் தினத்தில் மேலதிக கொடுப்பனவு வழங்குவதாக பிலிப்பைன்ஸிலுள்ள நகரமொன்றின் மேயர் அறிவித்துள்ளார்.

ஜெனரல் லூனா நகரின் மேயரான மெத் புளோரிடோ இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.  42 வயதான மெட் புளோரிடோவும் இன்னும் திருணம் செய்யவில்லை. தான் 'பிறந்தது முதல் சிங்கிளாக' இருப்பதாக அவர் கூறுகிறார்.

தன்னுடன் பணியாற்றும் ஊழியர்கள் 5 வருடங்களாக சிங்கிளாக இருந்தால், அவர்களுக்கு இன்றைய காதலர் தினத்தில் வழக்கமான ஊதியத்தைப் போன்று 3 மடங்கு ஊதியம் வழங்கப்படும் என மேயர் புளோரிடோ அறிவித்தள்ளார.

இன்றைய தினம் அவர்களுக்கு எப்படி இருக்கும் என்பதை நான் அறிவேன். காதலர் தினத்தில் அவர்களுக்கு எவரும் சொக்லேற், மலர்கள் வழங்க மாட்டார்கள். எனவே அவர்களுக்கு இத்தகைய  ஊக்குவிப்புகளை வழங்க நாம் தீர்மானித்தோம். அவர்களை சிலர் நேசிக்கிறார்கள் என்பதை இதன் மூலம் அவர்கள் உணரலாம்' என புளோரிடோ கூறியுள்ளார். 

3 ஆவது வருடமாக இத்திடத்தை புளோரிடோ அமுல்படுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.

மேற்படி மாநகர சபையில் 289 பேர் பணியாற்றுகிறார்கள். அவர்களில் இந்த விசேட கொடுப்பனவை பெறுவதற்கு பல கட்ட தேர்வுகளின் பின்னர் 37 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். 

தெரிவுசெய்யப்பட்டவர்களில் மிக வயதானவர் 64 வயதான ஒருவராவார்.

தெரிவுசெய்யப்பட்ட ஊழியர்களிடம், அவர்கள் இறுதியாக துணையொன்றைக் கொண்டிருந்த காலம், பிரிவுக்கான காரணம் குறித்தும் விசாரிக்கப்பட்டது.

'இச்சிறிய நகரில் அனைவரும் ஒருவரையொருவர் அறிவார்கள். எனவே யாரும் எதையும் மறைக்க முடியாது' என மேயர் மெட் புளோரிடோ கூறியுள்ளார். 

இத்திட்டத்துக்காக 28,000 பெசோவை (சுமார் 185,000 இலங்கை ரூபா, 43,000 இந்திய ரூபா) தனது சொந்த நிதியிலிருந்து மெட் புளோரிடோ வழங்குகிறார். 

இன்று செவ்வாய்க்கிழமை மாலை இக்கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளன. இரவில் 'டேட்டிங் கேம்' உட்பட கேளிக்கைகளும் நடத்தப்படவுள்ளன. 

சிலவேளை, இதில் அவர்கள் ஜோடியாகவும் கூடும் என்கிறார் புளோரிடோ.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52