(எம்.எம்.சில்வெஸ்டர்)
வெளிநாடுகளுக்கு செல்வதற்கான பயண அனுமதியை பெறுவதற்கு கடவுச்சீட்டுக்களை வழங்கியிருந்தவர்கள் மற்றும் ஒருநாள் சேவையின் ஊடாக தங்களுக்கான கடவுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள முடியாது.
போனதால் ஆவேசமடைந்த மக்கள் தங்களுக்கான கடவுச்சீட்டுக்களை உடனடியாக பெற்றுத்தரும்படி கோரி திங்களன்று மாலை முதல் இரவு வரை பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு, குடியகல்வு திணைக்களத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கணணி கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்டப கோளாறு காரணமாக குறித்த நேரத்தில் கடவுச்சீட்டுக்களை வழங்க முடியாது போனதாக குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவிக்கிறது.
வெளிநாடுகளுக்கு செல்வதற்கான பயண அனுமதியை பெறுவதற்கு கடவுச்சீட்டுக்களை பெற்றுக் கொள்வதற்கு திகதியையும் நேரத்தையும் முன்பதிவு செய்தவர்கள் , தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள திகதிக்கு மறுநாள் வந்து பெற்றுக்கொள்ளுமாறு குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதவாது, இன்றைய தினம் கடவுச்சீட்டை பெறுவதற்கு திகதி, நேரம் முன்பதிவு செய்தவர்கள் நாளைய தினமும், நாளைய தினம் திகதி , நேரம் முன்பதி செய்தவர்கள் நளை மறுதினமும் வரும்படியும், இவ்வாறு வெள்ளிக்கிழமை முன்பதிவு செய்தவர்கள் சனிக்கிழமை வரும்படியும் கேட்டுக்கொள்ளப்படுவதுடன், வரமுடியாதவர்களின் கடவுச்சீட்டுக்களை தபால் முலம் அனுப்பி வைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட காலதாமதத்தை நிவர்த்தி செய்வதற்காக, வெள்ளிக்கிழமையன்று (17) நேரம் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டவர்களுக்காக எதிர்வரும் 18 ஆம் திகதி சனிக்கிழமையன்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் திறந்திருக்கும்.
விண்ணப்பதாரிகளின் கடவுச்சீட்டுகள், தரவு முறைமை புதுப்பித்தல் துரிதகதியில் இடம்பெற்று வருவதாகவும் குடிவரவு,குடியகல்வு திணைக்களம் மேலும் குறிப்பிடுகிறது.
இதேவேளை, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வார நாட்களில் வழமையான நடவடிக்கைகளுக்கு திரும்பும் என குடிவரவு, குடியகல்வு திணைக்களம் தெரிவிக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM