திருகோணமலை, தோப்பூர் பகுதியில் யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவம் செவ்வாக்கிழமை (14) அதிகாலை சுமார் 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
யானையின் தாக்குதலின் காரணமாக தோப்பூர் - அல்லைநகர் 09 எனும் கிராமத்தைச் சேர்ந்த குப்பைத்தம்பி அப்துல்காதர் என்ற 83 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளார்.
குடியிருப்பு காணியில் நுழைந்த காட்டு யானை வீட்டில் இருந்த தென்னைமரத்தை சாய்த்து சேதம் செய்துள்ளது.
அப்போது சத்தம் கேட்டு வீட்டுக்கு வெளியே வந்த குப்பைத்தம்பி அப்துல்காதர் யானையை சீனாவெடி வெடித்து துரத்த முயற்சித்துள்ளார்.
இதன்போது கோவமடைந்த யானை அவரை துரத்தி வீட்டுக்குள் நுழைந்தபோது அவரை வீட்டுக்குள் வைத்து தாக்கியதில் இந்த பரிதாகபரமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சமயம் அவருடன் அவரது மனைவியும் வசித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM