தேடுதல் நடவடிக்கையின் போது பெண் உயிரிழப்பு - இரண்டு இராணுவ வீரர்கள் கைது

Published By: Rajeeban

14 Feb, 2023 | 10:55 AM
image

(எம்.வை.எம்.சியாம்)

கொழும்பு, பொரளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இராணுவ வீரர்கள் இருவர் நேற்று இரவு  கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

பொரளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பெஸ்லைன் மாவத்தை, ஹல்கஹகும்புர பிரதேசத்தில் பெண் ஒருவர் துப்பாக்கிச்சூட்டு இலக்காகியுள்ளதாக பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பொரளை ஹல்கஹகும்புர பிரதேசத்தில் இராணுவ வீரர்கள் இருவர் குறித்த பெண்ணை கைது செய்வதற்கு முற்பட்ட போது இராணுவ வீரர் ஒருவரின் துப்பாக்கி இயங்கியதில் குறித்த பெண் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 25 வயதுடைய ஹல்கஹகும்புர, பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார்.

இந்நிலையில், துப்பாக்கிச்சூடு தொடர்பில் குறித்த இராணுவ வீரர்கள் இருவரும் பொரளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பொரளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31