(எம்.மனோசித்ரா)
நாட்டின் பொருளாதாரம் முன்னேற்றம் அடைந்துள்ள நிலையில், நெல் கொள்வனவு உள்ளிட்ட மூன்று நடவடிக்கைகளின் கீழ் உடனடியாக பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
சிறுவர்கள் மந்த போஷனையை இல்லாதொழித்தல் , கர்ப்பிணிதாய்மாரின் போஷாக்கு தன்மையை அதிகரிப்பதற்கு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து தற்போது வரை பணித் தொகை வழங்கப்படாத 18,000 இற்கும் அதிக ஊழியர்களுக்கு அந்த தொகையை வழங்குவதற்கும் அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 19 பில்லியன் ரூபாவினை ஒதுக்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நேற்று திங்கட்கிழமை அமைச்சரவை கூடிய போதே இந்த தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
நாட்டின் பொருளாதாரம் சிறந்த நிலைமையை அடைந்தவுடனேயே , அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைய 3 நடவடிக்கைகளாக நெல் கொள்வனவு, மந்த போஷனையை இல்லாதொழித்தல் மற்றும் கர்ப்பிணி தாய்மாரின் போஷாக்கினை அதிகரிப்பதற்கான வேலைத்திட்டங்கள், பணித்தொகை செலுத்தப்படாத 18,000 இற்கும் அதிக ஊழியர்களுக்கு அதனை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சரொருவர் தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM