விரிவானதொரு சமூகப் பாதுகாப்பை வழங்கக்கூடிய வகையில் தற்போதைய சமூக உதவிச்செயற்திட்டங்களை மறுசீரமைப்பது அவசியம் - சர்வதேச மன்னிப்புச்சபை

Published By: Vishnu

13 Feb, 2023 | 06:23 PM
image

(நா.தனுஜா)

இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியானது பொதுமக்களின் சமூக, பொருளாதார உரிமைகளில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது. எனவே இவ்வாறானதொரு சூழ்நிலையில் விரிவான சமூகப்பாதுகாப்பை வழங்கக்கூடியவகையில் தற்போது நடைமுறையிலுள்ள சமூக உதவிச்செயற்திட்டங்களை மறுசீரமைக்கவேண்டியது அவசியமாகும் என்று சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்தியுள்ளது.

பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை முடிவிற்குக்கொண்டுவரல் தொடர்பாக ஐக்கிய நாடுகள் செயற்பாட்டுக்குழுவின் கூட்டம் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அதில் இலங்கை தொடர்பில் பேசப்படவேண்டிய முக்கிய விடயங்களை உள்ளடக்கி ஐக்கிய நாடுகள் செயற்பாட்டுக்குழுவிடம் சமர்ப்பித்துள்ள முற்கூட்டிய அறிக்கையிலேயே சர்வதேச மன்னிப்புச்சபை மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது. அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

 இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும் பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஏற்பட்டுள்ள தாக்கங்கள் தொடர்பில் 'இலங்கை : 'நாம் இப்போது முழுமையான ஸ்தம்பித நிலைக்கு அண்மையில் இருக்கின்றோம்' : இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் சுகாதாரம், உணவு மற்றும் சமூகப்பாதுகாப்புசார் உரிமைகளைப் பாதுகாத்தல்' என்ற தலைப்பில் அண்மையில் நாம் வெளியிட்ட அறிக்கையை உங்களது கவனத்திற்குக்கொண்டுவர விரும்புகின்றோம்.

தற்போதைய நெருக்கடி சமூக, பொருளாதார உரிமைகளில் எத்தகைய தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து அவ்வறிக்கையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இலங்கையில் எரிபொருள், உணவு, மருந்து உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப்பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஜுன் மாதமளவில் இலங்கையின் மொத்த சனத்தொகையில் 11 சதவீதமான குடும்பங்கள் அவற்றின் வருமானத்தை முழுமையாக இழந்திருப்பதுடன் 62 சதவீதமான குடும்பங்களின் வருமானம் வீழ்ச்சியடைந்திருக்கின்றது. அதேபோன்று கடந்த ஜுன் மாதம் உணவுப்பணவீக்கம் 90.9 சதவீதமாகப் பதிவானது.

இவ்வாறானதொரு பின்னணியில் பெண்கள் உள்ளடங்கலாக நீண்டகாலமாக பின்தங்கிய நிலையிலுள்ள சமூகங்கள் இப்பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை வலுவாக உணரநேரிடும் என்ற கரிசனை தோற்றம்பெற்றுள்ளது. உரிய நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்வதற்கான போக்குவரத்து வசதிகள் வரையறுக்கப்பட்டுள்ளமை, உயிர்காக்கும் மருந்துப்பொருட்களுக்கான தட்டுப்பாடு உள்ளடங்கலாக சுகாதாரசேவைகளில் நிலவும் மட்டுப்பாடான தன்மை போன்றவற்றின் காரணமாக கர்ப்பிணிப்பெண்கள் உயிரிழக்கக்கூடிய அச்சுறுத்தல்நிலை உயர்வடைந்திருக்கின்றது.

மேலும் சமுர்த்தி கொடுப்பனவு வழங்கல் போன்ற முக்கிய சமூக உதவிச்செயற்திட்டங்கள் தற்போதைய பொருளாதார நெருக்கடியினால் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவந்த சமூக ஆதரவு செயற்திட்டங்கள் தடைப்பட்டுள்ளமையானது மக்கள் முகங்கொடுத்திருக்கும் நெருக்கடி நிலைமையை மேலும் தீவிரப்படுத்தியிருக்கின்றது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில் தற்போது நடைமுறையிலுள்ள சமூக உதவிச்செயற்திட்டங்களை விரிவானதொரு சமூகப்பாதுகாப்பை வழங்கக்கூடியவகையில் மறுசீரமைக்கவேண்டியது அவசியமாகும் என்று அவ்வறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாளையதினம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்...

2024-09-17 14:57:49
news-image

நாட்டில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2024-09-17 13:46:03
news-image

ஒரு முன்னோடியான விஞ்ஞாபன ஒப்பீட்டு முயற்சி...

2024-09-17 13:51:00
news-image

17 இலட்சம் பெறுமதியுடைய 220 கிராம்...

2024-09-17 13:37:36
news-image

யுக்திய நடவடிக்கை : போதைப்பொருள் குற்றம்...

2024-09-17 13:42:02
news-image

தேர்தல் விதிமுறை மீறல்கள் குறித்து முறைப்பாடு...

2024-09-17 13:43:21
news-image

பேரினவாதிகளுக்கு வாக்களித்து அவர்களை பலப்படுத்த தமிழர்கள்...

2024-09-17 13:56:02
news-image

கஜமுத்து, முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற...

2024-09-17 12:12:50
news-image

பொலிஸ் அதிகாரிகள் மீது பசையை கொட்டிவிட்டு...

2024-09-17 12:45:25
news-image

சக ஊழியர்களுடன் ஏற்பட்ட முரண்பாட்டில் பொல்லால்...

2024-09-17 12:07:43
news-image

வேட்பாளர் கையேட்டை பெற்றுக்கொள்ள மறுத்த இளைஞன்...

2024-09-17 13:36:44
news-image

ஜனாதிபதி தேர்தல் ; சட்டவிரோதமாக ஒட்டப்பட்ட...

2024-09-17 12:07:12