(எம்.மனோசித்ரா)
அத்தியாவசியமற்ற சத்திரசிகிச்சைகளை இடை நிறுத்துமாறு கூறும் சுகாதார அமைச்சர் , அதனால் பொது மக்களுக்கு ஏற்படும் உயிர் அச்சுறுத்தலுக்கும், வைத்தியசாலை கட்டமைப்புக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களுக்கும் பொறுப்பேற்பாரா என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா கேள்வியெழுப்பினார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
அத்தியாவசியமற்ற சத்திரசிகிச்சைகளை இடைநிறுத்துமாறு சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். சத்திரசிகிச்சை என்பது விளையாட்டுக்காக செய்து கொள்வதல்ல என்பதை அவர் முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். உரிய காலத்தில் சத்திரசிகிச்சைகளை இடைநிறுத்துவதால் ஏற்படும் பின் விளைவுகளுக்கு யார் பொறுப்பேற்பது?
சத்திரசிகிச்சைகளை இடை நிறுத்துவதால் அதனுடன் தொடர்புடைய நபர்கள் பாதிக்கப்படும் அதே வேளை, இது எதிர்வரும் நாட்களில் வைத்தியசாலை கட்டமைப்பிற்கும் பாரிய அச்சுறுத்தலாக அமையும். இதனால் ஏற்படப் போகும் உயிர் அச்சுறுத்தல்களுக்கு சுகாதார அமைச்சு பொறுப்பேற்குமா?
தற்போது தேர்தலை காலம் தாழ்த்துவதற்காக அரசாங்கம் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு முயற்சியாக 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகளால் தமது சிறப்புரிமைகள் மீறப்படுவதாக சபாநாயகரிடம் முறைப்பாடளித்துள்ளனர். அரசாங்கத்தினால் எவ்வாறான சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் அதனை முறியடித்து மார்ச் 9 தேர்தலை நடத்தடிச் செய்வோம்.
நாம் அதிகாரப்பகிர்வை எதிர்ப்பவர்கள் அல்ல. ஆனால் தற்போது அது தொடர்பில் கருத்துக்களை வெளியிட்டு , அதன் ஊடாக இனவாதத்தைத் தூண்டி ராஜபக்ஷாக்களை மீண்டும் ஆட்சியில் அமர்த்தவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முயற்சிக்கின்றாரா? தேவையற்ற நேரத்தில் தேவையற்ற விடயங்கள் தொடர்பில் பேசி அநாவசிய பிரச்சினைகள் அவரால் தோற்றுவிக்கப்படுகின்றன என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM