மினுவாங்கொடை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் ஹெரோயின் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருபவர் என்பது  பொலிஸாரின் முதற்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் அவரிடமிருந்து  ஆயிரத்து 100 மில்லிகிராம் ஹேரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர்  மினுவாங்கொடை வேகொவ்வ பகுதியைச் சேர்ந்த 32 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.