இணையவழி விற்பனை : பாண் பக்கற்றில் உயிருடன் இருந்த எலி

Published By: T. Saranya

14 Feb, 2023 | 10:35 AM
image

இன்று எல்லாமே இணையம் என்று ஆகிவிட்டது. இந்நிலையில்,  வெளியே செல்வது மற்றும் கடைகளில் இருந்து பொருட்களை வாங்குவது பற்றிய ஏராளமான இணைய செயலிகள் வந்து விட்டன.

அந்தவகையில் இணைய வழி விற்பனை செயலிகள் தற்போது கடைசி நிமிடத் தேவைகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக மாறியுள்ளது.

இருப்பினும், காலாவதியான அல்லது மோசமான பொருட்களை பெற்றவர்கள் இணையத்தில் பகிரப்பட்ட சம்பவங்கள் ஏராளம். 

ஆனால் நிதின் அரோராவின் இந்த டுவிட்டர் பதிவு  உங்களை வெறுப்பில் சிரிக்க வைப்பது மட்டுமல்லாமல், பொருட்களை வாங்கும் செயலியில் பொருட்களை ஓடர் செய்வதற்கு முன் ஒருமுறைக்கு இருமுறை சிந்திக்க வைக்கும்.

இந்நிலையில், இந்தியாவைச் சேரந்த  அரோரா தனது திகில் கதையை டுவிட்டரில் பகிர்ந்து கொண்டார். 

அதாவது பிளிங்கிட்டில் ஒரு இறாத்தல் பாணை  ஒடர் செய்த கதையை தெரிவித்துள்ளார். ஒடர் செய்த பாண் பக்கற்  ஒரு எலியுடன் வீடு வந்து சேர்ந்ததை கண்டு அதிச்சியடைந்துள்ளார். அதுவும் எலி உயிருடன் இருந்துள்ளது.

இப்போது, எலி பக்கற்றில் எப்படி சிக்கியது என்று எங்களுக்குத் தெரியவில்லை, ஆனால் ஒடரை பொதி செய்யும் நபரும் டெலிவரி முகவரும் எலி பக்கெற்றில் இருப்பதை உணரவில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

அரோரா இது குறித்து பிளிங்கிட்டினுக்கு முறைப்பாடு அளித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து நிறுவனம் கருத்துகள் பிரிவில் பதிலளித்துள்ளது. “வணக்கம் நிதின், நாங்கள் விரும்பிய அனுபவம் இதுவல்ல. உங்கள் பதிவு செய்யப்பட்ட தொடர்பு எண் அல்லது ஒடர் ஐடியை டிஎம் வழியாகப் பகிரவும், நாங்கள் அதைப் பார்க்கிறோம், ” என  தெரிவித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொலை வழக்கு விசாரணையின்போது நீதிமன்றத்துக்குள் நுழைந்த...

2023-03-23 16:20:47
news-image

லொத்தரில் 11 கோடி ரூபாவை வென்ற...

2023-03-22 16:12:31
news-image

என்ன ஒரு துணிச்சல்...! முதலையை விரட்டியடித்த...

2023-03-18 16:35:26
news-image

லொறிகளை வழிமறித்து கரும்பைச் சுவைத்த காட்டு...

2023-03-09 13:02:12
news-image

கேரட்டை இசைக்கருவியாக மாற்றிய அவுஸ்திரேலிய இசைக்கலைஞர்

2023-03-07 16:49:45
news-image

பிரபல மொடல் நயோமி கம்பெல் தன்னுடன்...

2023-03-04 16:12:09
news-image

முள்ளம்பன்றியும் மாக்பி பறவையும்

2023-02-24 14:57:51
news-image

மனைவி மீது கொண்ட காதலை விசித்திரமான...

2023-02-22 10:38:10
news-image

மட்டுநகர் வாவியில் வெளிநாட்டுப் பறவைகள்

2023-02-21 16:25:38
news-image

காதலர் தினத்தில் கின்னஸ் உலக சாதனை...

2023-02-17 10:59:27
news-image

காதலர் தினத்தை பசு காதல் தினமாக...

2023-02-15 09:39:03
news-image

இணையவழி விற்பனை : பாண் பக்கற்றில்...

2023-02-14 10:35:07