நாம யோகங்களை ஏன் பார்வையிட வேண்டும்?

Published By: Ponmalar

13 Feb, 2023 | 03:08 PM
image

போட்டிகளும் பொறாமைகளும் நிறைந்த இன்றைய சூழலில் வசதியான உறவினர்களையும், தன்னிறைவு பெற்ற நண்பர்களையும் வென்று, அவர்களுக்கு சமமான இடத்தில் இருக்க வேண்டும் என்றால், அதற்காக எம்மில் சிலர் அதற்கான வழிகளை எதுவாக இருந்தாலும் அதனூடாக பயணிக்க தயாராகவே இருக்கிறார்கள்.

மேலும் உறவினர்களும், நண்பர்களும் வெற்றி பெற்ற பாதையை அறிந்து, அவர்களுக்கு அந்த சூட்சுமத்தை கற்பித்த சோதிடர்களை தேடி கண்டறிந்து, அவர்களை நாடி ஆலோசனை கேட்கவும் தயங்குவதில்லை.

அதே தருணத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையிலான சூட்சும ரகசியங்கள் இருக்கும். சிலருக்கு பஞ்சாங்கத்தின் ஐந்து கூறுகளான வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் ஆகிய ஐந்து விடயங்களில் ஏதேனும் ஒன்று சக்தி பெற்ற ஆற்றலாக இருந்து, அதனை துல்லியமாக அவதானித்து, தொடர்ந்து இயக்குவதன் மூலம் வாழ்க்கையில் வெற்றியைப் பெற்றிருப்பார்கள்.

இதன் போது எம்மில் பலரும் வாரம் எனப்படும் கிழமைகளை பற்றியும், திதி, நட்சத்திரம், கரணம் எனப்படும் விடயங்களைப் பற்றியும் ஓரளவு அறிந்து வைத்திருப்பர். ஆனால் யோகங்கள் குறித்தும், நாம யோகங்கள் குறித்தும் வெகு சிலரே அறிந்திருப்பர். மேலும் வேறு சிலர் அமிர்த யோகம், சித்தயோகம், மரணயோகம் என சில யோகங்களை மட்டும் தெரிந்து வைத்திருப்பர். ஆனால் நாம யோகம் என்பது இதிலிருந்து முற்றிலும் வேறானது.

எம்முடைய ஜாதகத்தில் சூரியன் இருக்கும் நட்சத்திரத்தின் பாகையிலிருந்து, சந்திரன் வீற்றிருக்கும் நட்சத்திரத்தின் பாகை வரையிலான இடைவெளியை கணக்கிட்டு தான் நாம யோகத்தை அவதானிக்கிறார்கள். இந்த நாம யோகத்தை 'தின யோகம்', 'நித்திய யோகம்', 'சூரிய சித்தாந்த யோகம்' ஆகியவற்றாலும் குறிப்பிடுகிறார்கள். மேலும் எந்த நாம யோகத்தில் பிறந்திருக்கிறார்கள் என்பதை பொறுத்து, அவர்கள் இந்த ஜென்மத்தில் தற்போது எந்த நிலையில் இருக்கிறார்களோ... அந்த நிலையிலிருந்து கடந்த காலம்.. நிகழ்காலம்.. எதிர்காலம்.. என மூன்றையும் உணர்த்துபவை இந்த நாம யோகங்கள் தான்.

கடந்த காலத்தில் தவறு செய்திருந்தால்... அதனை உணர்ந்திருந்தால்... அதனை களைவதற்காக உண்மையாக காத்திருந்தால்... அதற்கான நிகழ்கால சூழலையும், எதிர்கால நல்ல பலன்களையும், அவர்களுக்கான நாம யோகங்களே வழங்குகின்றன. அதாவது 27 நாம யோகங்களில் சுப நாம யோகங்களும், அசுப நாம யோகங்களும் இருக்கின்றன. இதில் நீங்கள் சுப நாம யோகத்தில் பிறந்தால், அதற்கான பலனையும், அசுப நாம யோகத்தில் பிறந்தால் உங்களுக்கான கர்ம வினைகளுக்கு கழிப்பதற்கான பலன்களையும் பெறுகிறீர்கள்.

குறிப்பாக விஷ்கம்பம், அதிகண்டம், சூலம், கண்டம், வியாகதம், வஞ்ரம், வியாதிபாதம், பரிகம், வைதிரூதி ஆகியவை அசுப நாம யோகங்களாகவும், இந்த நாம யோகங்கள் வரும் நாளை எம்முடைய கர்ம வினைகளை அகற்றுவதற்காக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் சோதிட வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பொதுவாக நாம யோகங்களுக்கு கிரகங்களின் அடிப்படையில் புதன் தான் அதன் அதிபதி. அதே தருணத்தில் நாம யோகங்களுக்கு பெருமாளும், கிருஷ்ண பகவானும்தான் வணங்க வேண்டிய கடவுள்கள். பஞ்சபூத தத்துவப்படி நாம யோகம் காற்றின் தத்துவத்தைக் கொண்டிருக்கிறது. இதனை  ஜோதிடர்களின் வழிகாட்டுதலின்படி சூட்சமமான முறையில் பயன்படுத்தினால், எம்முடைய கர்ம வினைகளை நீக்கி, இந்த ஜென்மத்தில் கிடைக்க வேண்டிய பலன்களை முழுமையாக பெறலாம். அதிலும் குறிப்பாக அசுப நாம யோகங்களின் காலகட்டத்தினை கர்ம வினைகளை நீக்குவதற்கும், சுப நாம யோகத்தினை எம்முடைய முன்னேற்றத்திற்கான காரியங்களை தொடங்கி பலன் பெறவும் முடியும்.

உங்களுக்கு ஜாதகரீதியாக பரிகாரங்களை மேற்கொண்ட பிறகும், பலன்கள் எதிர்பார்த்த அளவுக்கு கிடைக்கவில்லை என்றால், ஆயுஷ்மான் நாமயோகம் கொண்டவரை கண்டறிந்து, தேடி சந்தித்து, அவர்களை தொடர்ச்சியாக வணங்கி தாள் பணிவதன் மூலம் நல்ல பலன்களை உடனடியாக பெற இயலும். எம்முடைய அனுபவத்தில் காஞ்சி மகா ஸ்ரீ பெரியவர் சந்திரசேகந்திர சுவாமிகள் பவ கரணம் ஆயுஷ்மான் நாம யோகத்தில் அவதரித்து, முக்தி அடைந்தவர். இவரது புகைப்படத்தை வைத்து மனம் உருக வேண்டினால் ஆசி கிடைக்கும்.

அதே தருணத்தில் அசுப நாம யோகத்தில் பிறந்தவர்கள் நீர் நிலைகளுக்கு அருகில் இருப்பது அசுபம் என்பதால், அவர்கள் அங்கிருந்து விலகி வெகு தூரம் சென்ற பிறகே அவர்களுக்கான பலன்கள் கிடைக்கும். வேறு வழி இன்றி அங்கேயே அவர்கள் நீடித்திருந்தால், அவர்களுக்கு பல கண்டங்கள் மூலம் அசுப பலன்கள் ஏற்படும். வேறு சிலர்களுக்கு கால்களில் அதிக அளவு பாதிப்பு ஏற்படும்.

மேலும் நாம யோகங்களை கடைப்பிடிப்பதன் மூலம் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற பிராப்தம் இருந்தால், அவர்கள் ஜென்ம நட்சத்திரமும், ஆயுஷ்மான் நாம யோகமும் வரும் தினத்தில் மகான்களை சந்தித்து ஆசி பெறலாம் அல்லது ஆறு கால பூஜை நடைபெறும் ஆலயங்களுக்கு சென்று நட்சத்திரத்தின் பெயர், கரணத்தின் பெயர், நாம யோகத்தின் பெயர், திதியின் பெயர்... ஆகியவற்றை அங்குள்ள அர்ச்சகரிடம் தெரிவித்து, இறைவனுக்கு அர்ச்சனை செய்து அர்ச்சித்த பொருட்களை அர்ச்சகரிடமிருந்து பெறும்போது அவரிடமும் ஆசி பெற்றால் நீங்கள் நினைத்த காரியம் ஈடேறும்.

பெண்களாக இருந்தால் சௌபாக்கியம் நாம யோகத்தின் பிறந்திருக்கும் பெண்மணிகளிடம் ஆசி பெறலாம். இவர்களது திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். மேலும் திருமண பொருத்தம் பார்க்கும் போது மணப்பெண்ணின் ஜாதகத்தில் அந்தப் பெண் சௌபாக்கிய நாம யோகத்தில் பிறந்திருந்தால் அவரை திருமணம் செய்து கொள்ளலாம்.

வேறு சிலர் வேறு சில நாம யோகங்களில் பிறந்திருந்தால்... வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என விரும்பினால், காளி மற்றும் கருமாரி அம்மன் ஆகிய இரு பெண் இறைவனிடத்தில் மட்டுமே இருக்கும் திரிசூலம் எனும் சக்தி மிக்க ஆயுதத்தை வழிபட வேண்டும். இத்தகைய ஆலயங்களில் இருக்கும் திரிசூலத்தை நல்லெண்ணெய் மூலம் சுத்தப்படுத்தி, அதன் கூரான முனைமீது எலுமிச்சம் பழங்களை குத்தி வைத்து விட்டு வருவதன் மூலம் உங்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்க தொடங்கும். மேலும் இதனை உங்களது ஜென்ம நட்சத்திரம் மற்றும் சூல நாமயோகம் கூடிய தினத்தில் செய்தால் கூடுதல் பலனை பெறலாம்.

தகவல் : வேலு சிவா

தொகுப்பு : சுபயோகதாசன்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யோகங்களை அருளும் யோகி தலங்கள் மற்றும்...

2024-04-16 14:24:26
news-image

செல்வ நிலையை மேம்படுத்தும் கொட்டையூர் கோடீஸ்வரர்...

2024-04-15 17:19:54
news-image

அனைத்து தோஷங்களுக்கும் நிவர்த்தி தரும் செந்தலை...

2024-04-11 10:43:09
news-image

சிறுநீரக கோளாறுகளை நீக்கி அருள் புரியும்...

2024-04-09 17:37:27
news-image

வாஸ்து தோஷமும், பித்ரு தோஷமும் நீக்கி...

2024-04-08 18:31:07
news-image

பெண்மணிகள் தீர்க்க சுமங்கலியாக வாழ அருள்...

2024-04-05 20:56:43
news-image

குழந்தை வரம் அருளும் வழுவூர் வீரட்டானேஸ்வரர்...

2024-04-04 15:21:26
news-image

குரு பெயர்ச்சி பொதுப் பலன்கள் -...

2024-04-04 15:24:18
news-image

புண்ணியத்தை அள்ளித் தரும் ஸ்ரீ வாஞ்சியம்...

2024-04-03 12:56:05
news-image

சித்தர்கள் அருளிய கோமுகி தீர்த்த பரிகாரம்

2024-04-02 14:21:11
news-image

துயர் களையும் தீப பரிகார வழிபாடு

2024-04-01 17:32:20
news-image

முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் தோஷங்களை விலக்கி,...

2024-03-24 21:02:46