நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

Published By: Vishnu

13 Feb, 2023 | 01:03 PM
image

(எம்.வை.எம்.சியாம்)

நாட்டின் இருவேறு பகுதிகளில் 12 ஆம்  நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட தும்மோதர பகுதியில் உள்ள குமாரி நீர் வீழ்ச்சிக்கு நீராடச் சென்ற குழுவினரில் ஒருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதன் போது காயமடைந்த நபர் மீட்கப்பட்டு ஹங்வெல்ல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 43 வயதுடைய மரதானை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவராவார். சம்பவம் தொடர்பில் ஹங்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, அநூரதபுரம் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் சுனாத சந்தியில் உள்ள நீர் நிறைந்த தடாகத்தில் நீராடிக்கொண்டிருந்த பெண் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 70 வயதுடைய அநுராதபுரம் பகுதியில் யாசகம் எடுக்கும் பெண் ஒருவராவார்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையின் பொருளாதாரம் மீட்சிக்கான அறிகுறிகளைக் காண்பிக்கிறது...

2024-06-16 10:14:14
news-image

ரணில் - சஜித் இணைப்பு முயற்சி...

2024-06-16 09:56:40
news-image

பிரதான வேட்பாளர்களுடன் தனித்தனியே பேச்சுவார்த்தை :...

2024-06-16 09:34:17
news-image

தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் வவுனியாவில்...

2024-06-16 07:26:46
news-image

இன்றைய வானிலை

2024-06-16 06:08:16
news-image

ஊடகவியலாளர்கள் மீது வன்முறைத் தாக்குதல்களும் அச்சுறுத்தல்களும்...

2024-06-15 21:27:49
news-image

சாதகமான பதிலின்றேல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம்...

2024-06-15 21:22:14
news-image

சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைக்கும் சம்பவ...

2024-06-15 21:25:54
news-image

பாணமை கடலில் தவறி விழுந்து வைத்தியர்...

2024-06-15 21:48:25
news-image

பெண் ஊழியரின் துரித நடவடிக்கையால் பாரிய...

2024-06-15 21:49:57
news-image

யாழ். மாவட்டத்திலுள்ள ஒருதொகுதி ஆலயங்களை சீரமைப்பதற்கு...

2024-06-15 21:24:21
news-image

4 அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள்...

2024-06-15 21:27:01