விஜய் சேதுபதி வெளியிட்ட 'அரியவன்' பட ஃபர்ஸ்ட் லுக்

Published By: Ponmalar

13 Feb, 2023 | 02:51 PM
image

அறிமுக நடிகர் இஷான் நடிப்பில் தயாராகியிருக்கும் 'அரியவன்' எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி தன்னுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

'யாரடி நீ மோகினி', 'உத்தமபுத்திரன்', 'திருச்சிற்றம்பலம்' ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் மித்ரன் ஆர். ஜவஹர் இயக்கத்தில் தயாராகி இருக்கும் புதிய திரைப்படம் 'அரியவன்'.

இதில் புதுமுக நடிகர் இஷான் கதையின் நாயகனாக நடிக்க, அவனுக்கு ஜோடியாக பொலிவுட் நடிகை ப்ரனாலீ கோக்ரா நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் டேனியல் பாலாஜி முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். 

கே. எஸ். விஷ்ணு ஸ்ரீ ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன், வேத் சங்கர், கிரி நந்த் ஆகிய மூவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.

உண்மை சம்பவங்களை தழுவி தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எம் ஜி பி மாஸ் மீடியா எனும் பட நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதும் நிறைவடைந்து, இறுதி கட்டப் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. ஃபர்ஸ்ட் லுக்குடன் இப்படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியிடப்பட்டிருக்கிறது. நாயகன் இஷானின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புதிய முயற்சியாக முதலில் இரண்டாம் பாகத்தை...

2024-04-18 17:34:41
news-image

சாதிய அரசியலை அலசும் அண்ட்ரியாவின் 'மனுசி'

2024-04-18 17:31:38
news-image

நடிகர் மன்சூர் அலிகான் வைத்தியசாலையில் அனுமதி...

2024-04-18 13:17:36
news-image

சுப்பர் ஸ்டார் ரஜினியின் பாராட்டைப் பெற்ற...

2024-04-17 17:43:13
news-image

இயக்குநர் ஷங்கரின் இல்ல திருமண வரவேற்பில்...

2024-04-17 17:37:23
news-image

சீயான் விக்ரம் நடிக்கும் 'தங்கலான்' திரைப்படத்தின்...

2024-04-17 17:39:11
news-image

வல்லவன் வகுத்ததடா - விமர்சனம்

2024-04-17 17:39:57
news-image

மோகன் நடிக்கும் 'ஹரா' படத்தின் டீசர்...

2024-04-16 17:39:18
news-image

கெட்ட வார்த்தைகளை பேசி ரசிகர்களை வசப்படுத்தி...

2024-04-16 17:43:10
news-image

தமிழர்களின் பாரம்பரிய கலைக்கு ஆதரவளிக்கும் ராகவா...

2024-04-16 17:45:02
news-image

டிஜிட்டல் தள ரசிகர்களின் வரவேற்பை பெறுமா...

2024-04-16 17:45:54
news-image

மே மாதத்தில் வெளியாகும் வரலட்சுமி சரத்குமாரின்...

2024-04-16 17:41:35