கழக உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் 5 ஆவது தடவையாக றியல் மட்றிட் சம்பியன்

Published By: Sethu

13 Feb, 2023 | 11:48 AM
image

கழகங்களுக்கு இடையிலான உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் ஸ்பெய்னின் றியல் மட்றிட் கழகம் 5 ஆவது தடவையாக சம்பியனாகியுள்ளது.

2022 கழக உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தின் இறுதிப்போட்டியில் சவூதி அரேபியாவின் அல் ஹிலால் கழகத்தை றியல் மட்றிட் கழகம் 5:3 கோல்களால் வென்றது.

மொரோக்கோவின் ரபாட் நகரில் சனிக்கிழமை இரவு (இலங்கை, இந்திய நேரப்படி ஞாயிறு அதிகாலை) இப்போட்டி நடைபெற்றது.

கரீம் பென்ஸிமா தலைமையலான றியல் மட்ரிட் அணி சார்பில் வினிசியஸ் ஜூனியர் மற்றும் பெடேரிகோ வெல்வேர்டே இருவரும் தலா 2 கோல்களைப் புகுத்தினர். அவ்வணியின் மற்றொரு கோலை கரீம் பென்ஸிமாக புகுத்தினார்.

அல் ஹிலால் சார்பில் லூசியானோ, வியேட்டோ இரு கோல்களையும் மௌசா மரேகா ஒரு கோலையும் புகுத்தினர். 

2000 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கழக உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தில் 2001 முதல் 2004 ஆம் ஆண்டு வரை போட்டிகள் நடைபெறவில்லை. 2005 ஆம் ஆண்டு முதல் வருடாந்தம் இப்போட்டிகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு கண்டங்களிலும் சம்பியனாகும் 6 கழகங்களுடன் போட்டிகளை நடத்தும் நாட்டின் சம்பியன் உட்பட 7 அணிகள் இப்போட்டிகளில் பங்குபற்றுவது வழக்கம்.

றியல் மட்றிட் கழகமே இப்போட்டிகளில் அதிக (5) தடவைகள் சம்பியனாகியுள்ளது. 2014. 2016, 2017, 2018, 2022 ஆம் ஆண்டுகளில் அக்கழகம் சம்பியனாகியது. 

பார்ஸிலோனா 3 தடவைகளும், பிரேஸிலின் கொரின்தின்ஸ், ஜேர்மனியின் பயேர்ன் மியூனிக் ஆகிய தலா 2 தடவைகளும் சம்பியனாகியுள்ளன. 

பொதுவாக டிசெம்பர் மாதத்தில் இப்போட்டிகள் நடைபெறும். ஆனால், கடந்த வருடம் நாடுகளுக்கு இடையிலான உலகக் கிண்ணப் போட்டிகள் நவம்பர், டிசெம்பர் மாதங்களில் நடைபெற்றதால் 2022   கழக உலகக்கிண்ணப் போட்டிகளை இவ்வருடம் பெப்ரவரி மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டது.

கடந்த 1 ஆம் திகதி ஆரம்பமான 2022 கழக உலகக் கிண்ணப் போட்டிகளில், பிளெமென்கோ (பிரேஸில்), ரியல் மெட்ரிட் (ஸ்பெய்ன்), அல் ஹிலால் (சவூதி அரேபியா), விதாத் கசபிளான்கா (மொரோக்கோ), சியாட்டில் சோண்டர்ஸ் (ஐக்கிய அமெரிக்கா), ஆக்லண்ட் சிட்டி (நியூ ஸிலாந்து), அல் அஹ்லி (மொரோக்கோ) ஆகிய கழகங்கள் பங்குபற்றின. 

அரை இறுதிப் போட்டியில் அல் அஹ்லி கழகத்தை றியல் மட்ரிட் 4:1 கோல்களால் வென்றது. மற்றொரு அரை இறுதியில், பிளெமென்கோ கழகத்தை அல் ஹிலால் கழகம் 3:2 கோல்களால் வென்றது.

கழக கால்பந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற 3 ஆவது ஆசிய கழகம் அல் ஹிலால் ஆகும். இதற்குமுன், 2016 ஆம் ஆண்டில், ஜப்பானின் அஷிமா அன்ட்லெர்ஸ், 2018 ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அல் அய்ன் கழகங்கள் ஆகிய ஆசிய கழகங்கள் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியிருந்தன. அக்கழகங்களை றியல் மட்ரிட் கழகமே தோற்கடித்திருந்தது.

இந்நிலையில், அரை இறுதியில் வெற்றி பெற்ற அல் ஹிலால் கழகத்தின் ஒவ்வொரு வீரருக்கும் தலா தலா 10 லட்சம் றியால் வழங்குவதாக சவூதி அரேபிய இளவரசர் அல்வலீத் பின் தலால் அறிவித்தள்ளார். இறுதிப்போட்டியில் அல் ஹிலால் வெற்றியீட்டினால் மேலும் இத்தகைய பரிசுகள் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ரியான் பரக்கின் அதிரடி ராஜஸ்தானை வெற்றிபெறச்...

2024-03-29 00:52:31
news-image

19 வயதின் கீழ் ஆஸி. அணியை...

2024-03-28 20:03:31
news-image

இலங்கை கால்பந்தாட்ட அணி, ஜனாதிபதியை சந்தித்தது

2024-03-28 17:49:42
news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58