இயக்குநர் பாரதிராஜா தொடங்கி வைத்த திரைக்கதை வங்கி

Published By: Ponmalar

13 Feb, 2023 | 11:39 AM
image

பாடலாசிரியரும், கவிஞருமான மதன் கார்க்கியின் சிந்தனையில், தயாரிப்பாளரும், திரைப்படத்துறை நல விரும்பியுமான கோ. தனஞ்செயனின் வழிகாட்டலில் 'ஸ்க்ரிப்டிக்' எனப்படும் திரைக்கதை வங்கி ஒன்று புதிதாக தொடங்கப்பட்டிருக்கிறது.

இதனை இயக்குநர் இமயம் பாரதிராஜா தொடங்கி வைத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

காட்சி வழியிலான படைப்பு ஊடகம் என கருதப்படும் திரைப்படத்திற்கு, திரையில் சொல்லப்படும் கதை எனும் திரைக்கதை அவசியம்.

கதை நன்றாக இருந்தும் திரைக்கதை செழுமையாக இல்லாத காரணத்தினால் தோல்வி அடைந்த பல முத்திரை படைப்புகளை கடந்த தசாப்தங்களில் நாம் கடந்து வந்திருக்கிறோம்.

அதே தருணத்தில் இன்றைய போட்டிகள் நிறைந்த திரையுலகத்தில் இளம் பார்வையாளர்களை கவர்வதற்கு... சவாலான கதை மட்டுமல்ல, ஒவ்வொரு நிமிடமும் ஆச்சரியப்படுத்தும் வகையினதான வியப்பூட்டும் காட்சிகளும், திரைக்கதைகளும் தேவைப்படுகின்றன.

இதனை கருத்தில் கொண்டு பாடலாசிரியர்- வசனகர்த்தா- கதாசிரியர் -எழுத்தாளர் என பன்முக ஆளுமை திறனுடன் திரையுலகில் கோலோச்சும் மதன் கார்க்கியின் சீரிய சிந்தனையில் உதித்த வடிவம் தான் 'ஸ்கிரிப்டிக்' எனும் திரைக்கதை வங்கி.

இதனை தயாரிப்பாளர்- விநியோகஸ்தர்- திரைப்படத்துறை நல விரும்பி என பன்முக அவதாரத்துடன் வலம் வரும் கோ. தனஜெயனுடன் விவாதித்து, அவரின் வழிகாட்டலுடன் இணையதளம் மூலமாக இதனை அறிமுகப்படுத்தி சந்தைப்படுத்தி இருக்கிறார்கள்.

இதற்காக பிரத்யேக வலைதளத்தை தொடங்கியிருக்கும் இவர்கள், அந்த வலைதளத்தில் வெவ்வேறு ஜேனரிலான பத்து நேரடி திரைக்கதைகளும், மூன்று மறு உருவாக்க திரைக்கதைகளும், ஒரேயொரு தழுவல் பாணியிலான திரைக்கதையும் இடம்பெற்றுள்ளன.

இதனை தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் தங்களுடைய வெற்றி படைப்பிற்காக தெரிவு செய்து கொள்ள இயலும். மேலும் புதிதாக திரைக்கதை எழுதும் எழுத்தாளர்களுக்கு இவர்கள் திரைக்கதை எழுதுவதற்கான வாய்ப்பும் அளிக்கிறார்கள்.

இதன் காரணமாக இந்த திரைக்கதை வங்கி தமிழ் திரையுலகத்தை அதன் ரசனை அளவிலும்... புதிய படைப்புத்திறன் அளவிலும்... சாதனை படைத்து சகாப்தத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கலாம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஏப்ரலில் வெளியாகும் சுந்தர் சி யின்...

2024-03-27 15:40:07
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை மையப்படுத்தி உருவாகும்...

2024-03-27 21:28:48
news-image

'குளோபல் ஸ்டார்' ராம்சரண்நடிக்கும் 'கேம் சேஞ்சர்'...

2024-03-27 21:28:27
news-image

எடிசன் விருது விழா : சிறந்த...

2024-03-27 15:25:27
news-image

ஜெயம் ரவி நடிக்கும் 'ஜீனி' திரைப்படத்தின்...

2024-03-26 17:27:01
news-image

மனைவியை ஒருதலையாக காதலிக்கும் கணவனாக விஜய்...

2024-03-26 19:26:29
news-image

தேஜ் சரண்ராஜ் நடிக்கும் 'வல்லவன் வகுத்ததடா'...

2024-03-26 17:10:13
news-image

ரசிகரை நடிகராக்கிய உலகநாயகன்

2024-03-26 16:49:17
news-image

வெற்றிக்காக 'ஜீனி'யாக நடிக்கும் ஜெயம் ரவி

2024-03-25 21:19:56
news-image

'கொல்லுறாளே கொள்ளை அழகுல ஒருத்தி..'

2024-03-25 17:28:41
news-image

மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி வெளியிட்ட...

2024-03-25 17:29:35
news-image

கல்லூரி மாணவர்களை நம்பிய சந்தானம் படக்...

2024-03-25 17:19:37