(இராஜதுரை ஹஷான்)
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்க இந்தியாவுக்கு தார்மீக உரிமை கிடையாது.
இலங்கை உண்மையில் வங்குரோத்து அடைந்து விட்டதா என்பதை மீள்பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளேன்.
வங்குரோத்து நிலை என அறிவித்ததன் பின்னர் நாட்டுக்கு எதிராக தீய சக்திகள் தலைதூக்கியுள்ளன என ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார். சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இந்தியாவின் மேற்பார்வையுடனான பொறிமுறையை உருவாக்க தமிழ் தேசிய கூட்டமைப்பினர் அவதானம் செலுத்தியுள்ளார்கள்.
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதாக குறிப்பிட்டுக் கொண்டு இந்தியா பலவந்தமான முறையில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை இலங்கைக்கு அமுல்படுத்தியது.
காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை தவிர ஏனைய அதிகாரங்கள் மாகாணங்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இனப்பிரச்சினைகளுக்கு தீர்வாகவே மாகாண சபை தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது.
இருப்பினும் குறுகிய அரசியல் முரண்பாடுகளினால் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மாகாண சபை தேர்தலை பிற்போடும் நல்லாட்சி அரசாங்கத்தின் முயற்சிக்கு துணை சென்றார்கள்
தமிழ் மக்களின் அரசியல் உரிமை தொடர்பில் தற்போது கரிசணை கொள்ளும் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்கினேஷ்வரன் வடக்கு மாகாண முதலமைச்சராக பதவி வகித்துக் கொண்டு, மாகாண அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட நிதியை வடக்கு மாகாண மக்களின் அபிவிருத்திக்காக செலவு செய்யாமல்,ஒதுக்கிய நிதியை திறைச்சேரிக்கு திருப்பியனுப்பினார்.
தமிழ் மக்களின் அரசியல் தலைமைகள் என குறிப்பிட்டுக் கொள்ளும் தரப்பினர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண மக்களை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்கிறார்களே தவிர தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண அவதானம் செலுத்தவில்லை.
பொருளாதார பாதிப்புக்கு மத்தியில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமர்று தமிழ் அரசியல் தலைமைகள் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் கடுமையான அழுத்தம் பிரயோகிப்பதை அவதானிக்க முடிகிறது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிற்கு கிடைக்கப் பெற்ற 69 இலட்ச மக்களாணையுடன் தான் தற்போது பதவி வகிக்கிறார்.
13 ஆவது திருத்தத்திற்கு மக்களாணை வழங்கவில்லை. புதிய அரசியல் உருவாக்கத்திற்கு மக்கள் ஆதரவு வழங்கினார்கள்.
ஆகவே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13 ஆவது திருத்தத்தை விடுத்து,புதிய அரசியலமைப்பு உருவாக்கம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.
ஒற்றையாட்சி முறையின் ஊடாக அதிகார பகிர்வு,பொலிஸ் அதிகாரத்தில் மாற்றமில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இந்த உறுதிப்பாடு எவ்வளவு நாட்களுக்கு செல்லுபடியாகும் என குறிப்பிட முடியாது,ஏனெனில் 13 ஆவது திருத்த விவகாரத்தில் சர்வதேச மட்டத்தில் கடும் அழுத்தம் தற்போது வெளிப்பட்டுள்ளது.
13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துமாறு இலங்கைக்கு அழுத்தம் பிரயோகிக்கும் தார்மிக உரிமை இந்தியாவுக்கு கிடையாது.
இலங்கை உண்மையில் வங்குரோத்து அடைந்து விட்டதா என்பதை மீள்பரிசீலனை செய்யுமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளேன்.
வங்குரோத்து நிலை என அறிவித்ததன் பின்னர் நாட்டுக்கு எதிராக தீய சக்திகள் தலைதூக்கியுள்ளன. பொருளாதார நெருக்கடி மேலும் தீவிரமடைந்தால் நாட்டுக்கு எதிரான செயற்பாடுகள் இயல்பாகவே நிறைவேறும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM