இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் முதலாவது இன்னிங்ஸில் தென்னாபிரிக்க அணி 286 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்துள்ளது.

நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் போது தென்னாபிரிக்க அணி 267 ஒட்டங்களுக்கு 6 விக்கட்டுகளை இழந்திருந்த நிலையில், இன்று 19 ஓட்டங்களுக்குள்  மீதமிருந்த 4 விக்கட்டுகளையும் இழந்தது.

இலங்கை அணி சார்பில் லக்மால் 5 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் தனது முதலாவது இன்னிங்ஸை ஆரம்பித்துள்ள இலங்கை அணி 2 விக்கட்டினை இழந்து 19 ஓட்டங்களை பெற்று துடுப்பெடுத்தாடி வருகின்றது.