மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை படகு விபத்தில் ஆசிரியர் மற்றும் 3 மாணவர்கள் பலி!

Published By: Nanthini

13 Feb, 2023 | 10:41 AM
image

மட்டக்களப்பு - கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள 40 வட்டை குளத்தில் தோணியில்  சென்று மீன்பிடிக்க முயன்றபோது தோணி கவிழ்ந்ததில் ஒரு ஆசிரியர் மற்றும் 3 மாணவர்கள் உட்பட 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (12) பகல் ஒரு மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

களுவுந்தன் வெளியைச் சேர்ந்த 27 வயதுடைய ஆசிரியரான யோகராசா கிபேதன், 16 வயதுடைய மாணவர்களான தயாபரன் சஜித்தன், சத்தியசீலன் தனு, வீரசிங்கம் விதுசன் என்பவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

களூவுந்தன்வெளி அரச தமிழ் கலவன் பாடசாலையில் கா.பொ.த. சாதாரண தரத்தில் கல்வி கற்றுவரும் 3 ஆண் மாணவர்களும், 4 பெண் மாணவர்களும் ஆசிரியருமாக 8 பேர்  இன்று காலை தாந்தாமலை பகுதிக்கு சுற்றலா சென்றுள்ளனர்.

சுற்றுலா சென்ற இவர்கள் அந்த பகுதியிலுள்ள சிறிய குளமான 40 வட்டை குளத்தில் மீன்பிடிப்பதற்காக அங்கிருந்த தோணியொன்றில் ஆசிரியருடன் 3 மாணவர்களும் சென்ற நிலையில், தோணி குளத்தில் கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி 4 பேரும் காணாமல் போயிருந்தனர்.

இதனையடுத்து காணாமல் போனவர்களை அப்பகுதி மக்கள் தேடத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், ஆசிரியர் உட்பட 4 பேரும் சடலமாக மீட்கப்பட்டு, அரசடித்தீவு வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக  பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11
news-image

காலநிலை மாற்றத்திலிருந்து சிறுவர்களை பாதுகாக்க விசேட...

2024-03-28 09:46:04