(எம்.வை.எம்.சியாம்)
நாட்டில் தற்போது நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான பரிந்துரைகளை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது. வாகன விபத்துக்களால் ஏற்படும் உயிர்ச்சேதம் மற்றும்
வீதிகளில் அதிக வாகன நெரிசல் ஏற்படுவதை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைமையில் அண்மையில் இது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றதுடன்,
வீதி அபிவிருத்தி அதிகாரசபை, போக்குவரத்து திணைக்களம், கொழும்பு வீதிப் போக்குவரத்து அதிகார சபை, பொலிஸ் போக்குவரத்து பிரிவு உள்ளிட்ட பல திணைக்களங்கள் கலந்துரையாடலில் பங்குபற்றியிருந்தன.
இந்தப் பிரச்னை குறித்து அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்பதால் இது தொடர்பான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை 30 நாட்களுக்குள் தங்களுக்கு சமர்ப்பிக்குமாறு மனித உரிமை ஆணைக்குழு விவாதத்தில் பங்கேற்ற அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அறிக்கையை தமது ஆணைக்குழுவிடம் பெற்றுக்கொண்டதன் பின்னர் குறித்த பரிந்துரைகளை அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கவுள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவு மேலும் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM