அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பின் காரணமாக பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மக்கள் இழந்து வருகின்றனர்.
அத்தோடு அங்குள்ள மீனவர்களும் தொழில் நடவடிக்கைகளில் பேரிடர்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
குறிப்பாக, மருதமுனை, பாண்டிருப்பு, பெரிய நீலாவணை, சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை, நிந்தவூர், ஒலுவில், பொத்துவில் போன்ற பிரதேசங்களில் காற்றின் வேக அதிகரிப்பு, காற்றின் திசை மாற்றம், நீரோட்டத்தில் ஏற்பட்டுள்ள திசை மாற்றம், வழமைக்கு மாறான கடல் நீரின் குளிர்ச்சி, கடல் அலைகளின் கொந்தளிப்பு போன்ற காரணங்களால் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் தொடங்கி நிந்தவூர், காரைதீவு வரையிலான பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடலரிப்பினால் 400 மீட்டர் தூரம் வரையிலான நிலப்பகுதிக்குள் கடல் நீர் புகுந்துள்ளதாலும், கடந்த சில தினங்களாக கடல் அரிப்பு ஏற்பட்டு வருவதாலும் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காரைதீவு, நிந்தவூர் கரையோர பிரதேசங்களில் கடந்த சில தினங்களாக அதிகரித்து வரும் கடலரிப்பினை நிரந்தரமாக தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு பல்வேறு தரப்பினர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
எனினும், அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்களில் கடலரிப்பு தீவிரமடைவதற்கு ஒலுவில் பிரதேசத்தில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமையே பிரதான காரணம் என அப்பிரதேச மக்கள் நீண்ட காலமாக குற்றச்சாட்டு முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM