ரஷ்ய விமானத்தின் கறுப்புப்பெட்டி கருங்கடலில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ரஷ்யாவின் சொச்சியிலிருந்து சிரியா நோக்கி சென்ற tu-154 விமானம் கருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளாகியிருந்தது.

விமானம் விபத்துக்குள்ளானமைக்கு விமானி அல்லது விமானத்தின் கோளாறு காரணமாக இருக்கலாமென முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது

ரஷ்ய படையினர், ஊடகவியலாளர்கள் மற்றும் விமானப் பணியாளர்கள் உட்பட 92 பேர் குறித்த விமானத்தில் பயணித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.