பேறுகால குருதி அழுத்த பாதிப்பிற்கான நிவாரண சிகிச்சை

Published By: Ponmalar

11 Feb, 2023 | 06:34 PM
image

இன்றைய சூழலில் இளம் பெண்கள் தங்களுடைய வாழ்க்கை நடைமுறையை மாற்றி அமைத்துக் கொண்டிருப்பதால், திருமணத்திற்கு பிறகு அவர்கள் கருத்தரிக்கும் காலகட்டத்தில் ஜேஸ்டேஷனல் டயாபடீஸ் எனப்படும் கர்ப்ப கால சர்க்கரை நோயை போல..., பேறு காலத்தின் போது ஜேஸ்டேஷனல் ஹைப்பர்டென்ஷன் எனப்படும் ரத்த அழுத்த பாதிப்பும் ஏற்படுவதாக மகப்பேறு மருத்துவர் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

இத்தகைய ரத்த அழுத்த மாறுபாட்டிற்கு மகப்பேறு மருத்துவ நிபுணரிடம் உரிய ஆலோசனையும், சிகிச்சையும் பெற வேண்டும். இதனை தவிர்த்தால் பிரசவத்தின் போது தேவையற்ற சிக்கல் உருவாவதுடன், தாயாரின் கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகள் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம் என்றும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

பெண்கள் கருத்தரித்திருக்கும் காலகட்டங்களில் அவர்களுடைய இரத்த சர்க்கரையின் அளவு உயர்வது இயல்பு என்றாலும், மகப்பேறு மருத்துவரின் அவதானிப்பில் இருக்க வேண்டும்.

அதே தருணத்தில் கருவுற்றிருக்கும் தாய்மார்களின் இரத்த சர்க்கரையின் அளவைப் போலவே, அவர்களின் ரத்த அழுத்த அளவையும் சீராக பராமரிக்க வேண்டும். இதன் போது ரத்த அழுத்தத்தின் அளவு உயரும் என்றாலும், அதனையும் மருத்துவர்களின் பரிந்துரையின் பெயரில் தொடர் அவதானிப்பில் வைத்திருக்க வேண்டும்.

கருவுற்றிருக்கும் ஐந்தாவது மாதத்தில் அவர்களது ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்படுகிறது. இயல்பான அளவைவிட கூடுதலாக ரத்த அழுத்தத்தின் அளவு இருந்தால், அதனை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்து, மாத்திரைகளை பெண்மணிகள் கவனமுடன் சாப்பிட வேண்டும். பிரசவத்திற்குப் பிறகு மூன்று மாதங்களுக்குள் ரத்த சர்க்கரையின் அளவு மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்புவதை போல், ரத்த அழுத்தத்தின் அளவும் இயல்பான நிலைக்கு திரும்ப வேண்டும்.

சிலருக்கு இந்நிலை ஏற்படவில்லை என்றால், உடனடியாக அவர்கள் மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையையும், வழிகாட்டலையும் மேற்கொள்ள வேண்டும்.

ஏனெனில் பேறு காலத்தின் போது உயர்வடைந்த குருதி அழுத்தம், கல்லீரல், சிறுநீரகம் போன்ற உறுப்புகளை பாதிக்கக்கூடும்.

மேலும் எதிர்காலத்தில் உயர் குருதி அழுத்த பாதிப்புள்ள நோயாளிகளாகவும் அவர்கள் மாற்றம் பெற கூடும். எனவே பேறு காலத்தின் போது உண்டாகும் ரத்த அழுத்த அளவு மாறுபாட்டை துல்லியமாக அவதானித்து, அதனை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.

டொக்டர் ஸ்ரீதேவி

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04