ஹட்டனில் வலம்புரி சங்கை விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது

Published By: Nanthini

11 Feb, 2023 | 03:58 PM
image

விற்பனைக்கு தயாராக இருந்த 6 கோடி ரூபா பெறுமதியான வலம்புரி சங்குடன் சந்தேக நபர்கள் இருவர் நுவரெலியா பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இன்று (11) அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலொன்றின் அடிப்படையில், தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், ஹட்டன் - கொழும்பு வீதியில் வசிக்கும் சந்தேக நபர், வலம்புரி சங்கை 6 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்றபோது அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து வலம்புரி சங்கு கைப்பற்றப்பட்டதையடுத்து, கைதான இருவரும் மேலதிக விசாரணைகளுக்காக ஹட்டன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் ஹட்டன் மற்றும் நுவரெலியா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், பிரதான சந்தேக நபரின் வீட்டிலேயே வலம்புரி சங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்தது எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னார் தீவில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும்...

2025-02-15 17:50:31
news-image

ஹர்ஷவுக்கு ஏன் கொழும்பு மாவட்ட தலைவர்...

2025-02-15 14:40:41
news-image

நுரைச்சோலை மின்னுற்பத்தி இயந்திரங்கள் மீண்டும் செயற்பட...

2025-02-15 16:34:16
news-image

தம்பகல்ல பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய...

2025-02-15 15:42:37
news-image

மிகவும் பலவீனமான ஆட்சியே இன்று நாட்டில்...

2025-02-15 15:36:36
news-image

கொழும்பு மாவட்டத் தலைவர் பதவியை தனதாக்கிக்...

2025-02-15 14:34:51
news-image

யாழ். கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் நூலகத்தை...

2025-02-15 16:35:56
news-image

சுற்றுலா விசாவில் வந்து நகைத் தொழிலில்...

2025-02-15 15:38:56
news-image

புறக்கோட்டையில் ஐஸ், கொக்கெய்ன் போதைப்பொருட்களுடன் இளைஞன்...

2025-02-15 15:41:26
news-image

மாணவர்கள் இடைவிலகாத, கைவிடப்படாத கல்வி முறைமையை...

2025-02-15 14:45:49
news-image

பஸ் மோதி மூதாட்டி உயிரிழப்பு ;...

2025-02-15 14:55:14
news-image

பெப்ரவரி மாதத்தின் முதல் 13 நாட்களில்...

2025-02-15 14:47:14