பதுளை நிருபர் 

பதுளைக்கு செல்லும் தபால் ரயிலில் வெடி குண்டிருப்பதாக கிடைக்கப் பெற்ற அனாமதேய தகவலையடுத்து இரு மணித்தியாலயங்கள் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் சோதனைகளின் பின் ரயில் மீண்டும் சேவையில் ஈடுப்படுத்தப்பட்டது.

கொழும்பு கோட்டையில் பதுளைக்கு புறப்பட ஆயத்தமான இரவு தபால் ரயிலில் வெடி குண்டு  இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து குண்டு செயலிழக்கும் பிரிவினர் உள்ளிட்டு பெருந்தொகையான பொலிஸார்இ ரயிலில் தேடுதல்களை மேற்கொண்டனர். அவ் வேளையில் ரயிலில் இருந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட பயணிகள் கீழறக்கப்பட்டேஇ மேற்படி தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டன.

இத் தேடுதல்களில் குறிப்பிட்ட ரயிலில் எந்தவொரு வெடிக்கும் பொருளும் இல்லையென்பதை ஊர்ஜிதப்படுத்திய பின்னர் பயணிகள் மீண்டும் அதே ரயிலில் ஏற்றப்பட்டு குறிப்பிட்ட நேரத்தைவிட இரண்டரை மணித்தியாலயங்களுக்குப் பின் இரயில் பதுளையை நோக்கி புறப்பட்டது. 

இச் சம்பவத்தினால் பயணிகளுக்கு பெரும் அசௌகரியங்கள் ஏற்பட்டதுடன் பயணிகள் மத்தியில் பெரும் பயமும் பீதியும் ஏற்பட்டதை அவதானிக்க முடிந்தது.