(எம்.மனோசித்ரா)
ஆரம்ப காலங்களில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தம் தொடர்பில் நடவடிக்கைகளை முன்னெடுக்கும் போது எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டால் தென்னிலங்கை தலைவர்கள் அதனை கைவிட்டுவிடுவர்.
ஆனால் கடந்த வாரம் பாராளுமன்ற வளாகத்தில் பாரிய எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்ட போதிலும் , ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவ்வாறு செயற்படவில்லை. எனவே அவர் 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவார் என்று நம்புவதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
இந்திய நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள யாழ்.கலாசார நிலையத்தை மக்கள் பாவனைக்காக கையளிக்கும் நிகழ்வு சனிக்கிழமை (11) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
நாட்டில் குழப்ப நிலைமையில் காணப்பட்ட போது அதனை பொறுப்பேற்று பாதுகாத்து மீட்டெடுத்துக் கொண்டிருக்கின்றார். தமிழ் மக்கள் வெறுமனே தமிழர்களாக மாத்திரமின்றி இலங்கையர்களாகவும் இருக்க விரும்புகின்றனர் என்பதை உணர்ந்தவராக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எமது பிரச்சினைகளை தீர்ப்பார் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.
பிரபலத்தை தேடித்தரும் அரசியலில் ஈடுபடாமல் நாட்டினதும் நாட்டு மக்களினதும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளையே ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார்.
அவர் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளதைப் போன்று 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நடைமுறைப்படுத்துவார் என்று நம்புகின்றோம்.
பாராளுமன்ற வளாகத்தில் கடந்த வாரம் இது தொடர்பில் சிலர் அறியாமையால் கூச்சலிட்டிருந்த போதிலும் , ஜனாதிபதி அதனைப் பொருட்படுத்தவில்லை. ஆரம்பத்தில் இவ்வாறான பிரச்சினைகள் வரும் போது தென்னிலங்கை தலைவர்கள் அதனைக் கைவிட்டுவிடுவார்கள். ஆனால் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவ்வாறு எதனையும் செய்யவில்லை.
மாறாக அவர் எமது மக்களின் உணர்வுகளைப் பிரதிபலித்திருக்கின்றார். அவ்வாறன்றி வெறுமனே ஒரு அரசியல்வாதியாக மாத்திரம் செயற்படவில்லை. எனவே ஜனாதிபதியால் முன்வைக்கப்படும் நடைமுறை சாத்தியமான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டியது அவசியமாகும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM