பாதிக்கப்பட்ட துருக்கி மக்களுக்கு நன்கொடையாக தேயிலையை வழங்கியது இலங்கை

Published By: Digital Desk 5

11 Feb, 2023 | 04:06 PM
image

பூகம்பத்தினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள துருக்கி மக்களுக்கு உதவும் நோக்கில் உள்நாட்டு தேயிலை ஏற்றுமதியாளர்களின் அனுசரணையுடன் இலங்கை அரசாங்கம் தேயிலையை நன்கொடையாக வழங்கியுள்ளது.

இந்த நன்கொடை வெளிவிவகார அமைச்சின் அவசர உதவிப்பிரிவின் பணிப்பாளர் நாயகம் ஓ.எல்.அமீர் அஜ்வத்தினால் இலங்கைக்கான துருக்கி நாட்டுத்தூதுவர் டெமெற் செகெர்ஸியோக்லுவிடம் நேற்று வெள்ளிக்கிழமை (10) கையளிக்கப்பட்டது.

துருக்கி மக்களுக்கான இந்த உதவி வழங்கலானது பிரதமர் அலுவலகம், வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை தேயிலை சபை ஆகியவற்றினால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.

இக்கையளிப்பின்போது வெளிவிவகார அமைச்சின் ஐரோப்பிய பிராந்திய பணிப்பாளர் ப்ரியங்கிகா தர்மசேன, இலங்கை தேயிலை சபையின் தலைவர் நிராஜ் டி மெல் மற்றும் இலங்கை தேயிலை சபையின் மேம்பாட்டுப்பிரிவு பணிப்பாளர் பவித்ரி பீரிஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசின் பொதுச் சேவை வழங்கல்களை வினைத்திறன்...

2026-05-09 20:58:51
news-image

கபில சந்திரசேனவின் பிரேத பரிசோதனை அறிக்கை...

2026-05-09 20:55:37
news-image

யாழ் போதனா வைத்தியசாலை மருந்துக் களஞ்சிய...

2026-05-09 20:56:13
news-image

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையை அரசாங்கம் திட்டமிட்டு...

2026-05-09 19:05:16
news-image

பெலவத்தை உத்தரவுக்கமையவே என்னிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது...

2026-05-09 18:40:18
news-image

மட்டக்களப்பு மேய்ச்சல் தரை விவகாரம் :...

2026-05-09 18:41:54
news-image

இளம் குடும்பஸ்தர் கடத்தித் தாக்கப்பட்டு 3...

2026-05-09 20:18:52
news-image

அரசியல் பழிவாங்கல்களுக்காக அரச பொறிமுறை கீழ்த்தரமான...

2026-05-09 17:05:37
news-image

ஹட்டன் வெலிஓயாவில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம்

2026-05-09 21:00:11
news-image

பிரதமருக்கும் வியட்நாம் ஜனாதிபதிக்கும் இடையில் இருதரப்பு...

2026-05-09 20:25:44
news-image

இலங்கை - வியட்நாம் இடையில் வர்த்தக,...

2026-05-09 21:02:23
news-image

மரியா காஸ்டிலோ - அருண் ஹேமச்சந்திர...

2026-05-09 20:47:28