இவ்வருடத்தில் இதுவரையில் டெங்கு நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை  49 ஆயிரம் பேர்வரை டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் டெங்கு நோயினால் மிக வேகமாக அதிகரித்துவரும் நோயளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில் நாடுமுழுவதும் இரண்டு நாட்கள் டெங்கு ஒழிப்பு திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.