முருங்கைக் கீரை பக்கோடா

Published By: Ponmalar

10 Feb, 2023 | 05:15 PM
image

தேவையான பொருட்கள்: 

கடலை மா - 200 கிராம் 

வெங்காயம் - 50 கிராம் 

முருங்கைக் கீரை - 2 கைப்பிடி அளவு 

நறுக்கிய பச்சை மிளகாய் - 2 

நெய் - ஒரு டீஸ்பூன் 

பெ. சீரகம் - ஒரு டீஸ்பூன் 

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை: 

வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

முருங்கைக் கீரையை காம்பு இல்லாமல் இலையை மட்டும் ஆய்ந்து நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். 

ஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு அதனுடன் உருக்கிய நெய்யுடன், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், முருங்கைக் கீரை, பெ. சீரகம், உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். 

பின்பு சிறிது நீர் தெளித்து கையால் நன்றாக கலக்கிக் கொள்ளவும். 

மா உதிரியாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். 

பின்பு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், வெங்காயக் கலவையை உதிரி உதிரியாகப் போட்டு, பொன்னிறமாக சிவந்து வரும்வரை பொரித்து எடுக்கவும். 

இப்போது சூப்பரான முருங்கைக் கீரை பக்கோடா ரெடி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right