logo

குழந்தைகளின் நினைவாற்றல் திறனை வளர்ப்பது எப்படி..?

Published By: Ponmalar

10 Feb, 2023 | 04:50 PM
image

அடிக்கடி கணக்குப் போட்டுப் பார்ப்பது, கணக்கு சூத்திரங்களை நினைவுபடுத்திக் கொண்டிருப்பது மூளைக்கு நல்ல பயிற்சியே. கணிதப் பாடத்தின் போது கல்குலேட்டரைப் பயன்படுத்தாமல் கையால் எழுதிப் பெருக்கி வகுத்துக் கணக்குப் போடுவது மூளைக்கு மிக மிக நல்லது. 

நினைவாற்றல் என்றால் என்ன? என்ற கேள்விக்கு 'ஒரு விஷயத்தை மறக்காமல் இருப்பதுதான் நினைவாற்றல்' என்று பதில் வரும். ஆனால், இது சரியான பதில் அல்ல! 

மனதில் இருக்கின்ற அறிவில் இருந்து சரியான விவரத்தைச் சரியான நேரத்தில் வெளிப்படுத்தும் திறமைதான் நினைவாற்றல் என்கிறார்கள் விஞ்ஞானிகள்..! இதற்கு அமெரிக்க விஞ்ஞானிகள் கூறும் காரணங்களை பாருங்களேன். உங்களுக்கே உண்மை புரியும். 

ஒரு மாணவனை எடுத்துக் கொள்ளுங்கள். பாடங்களை நன்றாகப் படித்துவிட்டு தேர்வுக்குச் செல்கிறான். அவன் படித்ததில் இருந்து கேள்விகள் வருகின்றன.

ஆனால், தேர்வறையில் இருக்கும்போது பதில் நினைவுக்கு வராமல் வீட்டுக்குச் சென்றபிறகு நினைவிற்கு வந்தால், அதனால் ஏதாவது பலன் இருக்குமா? நிச்சயம் இல்லை.

பலருக்கும் பல விஷயங்கள் நினைவில் இருக்கும். ஆனால், தேவையான நேரத்தில் குறிப்பிட்ட விஷயத்தை நினைவிற்குக் கொண்டுவர முடியாமல் தவிப்பார்கள். தேவைப்படும் நேரத்தில் உடனடியாக நினைவுக்குக் கொண்டு வருவதே சரியான நினைவாற்றல். 

மூளையின் சக்தி என்பது அளவிட முடியாதது. ஒருவர் நூறாண்டுகள் வாழ்கிறார். இந்த 100 ஆண்டுகளில் ஒவ்வொரு வினாடியிலும் ஒரு சில விஷயங்களை நினைவில் சேகரித்துக் கொண்டிருக்கிறார்.

அவ்வளவு விஷயங்களையும் அவர் நினைவில் சேகரித்து வைத்தால்கூட தனது மூளை செயல்திறனில் 10இல் ஒரு பங்கை மட்டுமே பயன்படுத்துகிறார். அந்தளவுக்கு திறன் வாய்ந்தது மனித மூளை' என்கிறார்கள் விஞ்ஞானிகள். 

சரி, ‘நினைவாற்றலை எப்படி வளர்ப்பது’ என்பதற்கு, விஞ்ஞானிகள் விளக்கம் அளித்திருக்கிறார்கள். 

உடற்பயிற்சி மூலம் உடலை ஆரோக்கியமாக பேணிக்காப்பது போல மூளைக்கான பயிற்சியும் இருக்கிறது. இதற்கான பயிற்சியைச் செய்யும் போது மூளையின் செயல்திறன் அதிகரிக்கும். நினைவாற்றலையும் மேம்படுத்தலாம். 

அடிக்கடி கணக்குப் போட்டுப் பார்ப்பது, கணக்கு சூத்திரங்களை நினைவுபடுத்திக் கொண்டிருப்பது மூளைக்கு நல்ல பயிற்சியே. கணிதப் பாடத்தின் போது கல்குலேட்டரைப் பயன்படுத்தாமல் கையால் எழுதிப் பெருக்கி வகுத்துக் கணக்குப் போடுவது மூளைக்கு மிக மிக ஏற்றது. 

அதேபோல ரெயில் பயணம் செய்வதாக வைத்துக் கொள்வோம். குறிப்பிட்ட நேர இடைவெளி கடந்ததும் எத்தனை ஸ்டேஷன்கள் கடந்திருக்கிறோம் என்று நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும். சுறுசுறுப்பாக இயங்குபவர்களுக்கு மூளை அதிகமாக வேலை செய்யும். மூளையில் இருக்கும் 'நியூரோன்கள்' விவரங்களை வெளிக்கொணர வேகமாக ஆர்வம் காட்டும். குழந்தைகள் விளையாட்டில் ஆர்வம் காட்டினால், மன அழுத்தம் குறையும். மன அழுத்தம் அதிகமாக இருக்கும்போது 'அட்ரினலின்' என்ற ஹோர்மோன் சுரக்கும். அது குழந்தைகளின் நினைவாற்றலைக் கெடுக்கும். குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்குவதன் மூலம் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கலாம். அதிக புரத உணவுகளும் பயனளிக்கும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்!

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூக்கு தண்டு வளைவு என்னும் பாதிப்பிற்குரிய...

2023-06-08 15:19:39
news-image

மயக்கவியல் சிகிச்சை, பக்க விளைவுகளை ஏற்படுத்துமா..?

2023-06-07 21:13:30
news-image

வயிற்றிலுள்ள அதிக கொழுப்பை கரைக்க உதவும்...

2023-06-07 21:13:01
news-image

உட்கார்ந்தபடியே தூங்கினால் இவ்வளவு பிரச்சினை வருமா?

2023-06-07 21:11:03
news-image

உடலிலுள்ள கெட்ட கொழுப்பை கரைக்கும் வெண்டிக்காய்

2023-06-07 20:26:33
news-image

சர்க்கரை நோயாளிகளுக்கு பக்கவாத பாதிப்பு ஏற்படுவது...

2023-06-06 18:39:42
news-image

இன்டர்ஸ்டீடியல் சிஸ்டிடிஸ் எனும் சிறுநீர்ப்பை அழற்சி...

2023-06-06 14:47:18
news-image

தூக்கமின்மையால் பாதிக்கப்படும் சர்க்கரை நோயாளிகளுக்கான தீர்வுகள்...

2023-06-06 16:33:44
news-image

மூளை திரவ கசிவு ( செரிப்ரல்ஃப்ளூயிட்...

2023-06-05 12:26:43
news-image

கர்ப்பப்பையின் சீரான வளர்ச்சிக்கு...

2023-06-01 13:55:37
news-image

நுரையீரல் ஆரோக்கியம் குறித்த கவனம் அவசியமா..?

2023-06-01 12:12:45
news-image

இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படுவது ஏன்?

2023-06-01 11:53:03