தேர்தல் இடம்பெறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை - ஜீ.எல்.பீரிஸ்

Published By: Digital Desk 5

10 Feb, 2023 | 04:36 PM
image

(எம்.மனோசித்ரா)

திட்டமிட்ட தினத்தில் தேர்தலை நடத்துமாறு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பிரஜைகளின் வாக்களிக்கும் உரிமையை உறுதிப்படுத்தியுள்ளது.

தேர்தல் இடம்பெறுமா இல்லையா என்ற வாத பிரதிவாதங்கள் நிறைவுக்கு வந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

தேர்தலை திட்டமிட்டவாறு நடத்துமாறு வெள்ளிக்கிழமை (10) உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

பிரஜைகளுக்கு காணப்படும் வாக்களிக்கும் உரிமை இந்த நீதிமன்றத் தீர்ப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாம் தேர்தலுக்கு தயாராகிக் கொண்டிருப்பதைப் போன்று மக்களும் தேர்தலுக்கு தயாராக வேண்டும். மார்ச் 9ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

அதற்கமைய சட்டத்தின் பிரகாரம் தேர்தல் ஆணைக்குழு நிச்சயம் தேர்தலை நடத்த வேண்டும். தேர்தலுக்கான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துச் செல்வதாக ஆணைக்குழு நீதிமன்றத்திடம் உறுதியளித்துள்ளது.

எனவே தேர்தல் இடம்பெறுமா இல்லையா என்ற வாத பிரதிவாதங்கள் நிறைவுக்கு வந்துள்ளன.

எவ்வாறிருப்பினும் தேர்தலுக்கு நிதி இல்லை என்று கூறுவது பாரதூரமானதொரு விடயமாகும். ஜனநாயக நாடொன்றில் இவ்வாறு தேர்தலை நடத்துவதற்கு பணம் இல்லை என்று எவராலும் கூற முடியாது.

200 மில்லியன் ரூபா செலவில் தேர்தலை நடத்துவதற்கும் , 37 இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பதற்கும் , மேலதிகமாக இரு அமைச்சரவை அமைச்சர்களை நியமிப்பதற்கும் அரசாங்கத்திடம் பணம் இருக்கிறது.

ஆனால் மக்களின் வாக்குரிமையைப் பாதுகாப்பதற்கு பணம் இல்லை என்கிறது. இது அடிப்படையற்றதாகும் என்றார்.

இதே வேளை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவிக்கையில் ,

பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற ரீதியில் நீதிமன்றத்திற்கு நன்றி கூறுகின்றோம். தேர்தல் என்பது அடிப்படை உரிமையாகும்.

அதன் அடிப்படையில் நீதிமன்றம் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதை நாம் ஆரம்பத்திலிருந்தே வலியுறுத்தி வந்தோம். எமது கோரிக்கைக்கு ஏற்ப நீதிமன்றத்தினால் மக்களின் அடிப்படை உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளன. இது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04