'கிராமத்து நாயகன்' சசிகுமார் நடித்திருக்கும் 'அயோத்தி' எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற 'திருட்டு பயலே...' எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் ஆர்.மந்திரமூர்த்தி இயக்கத்தில் தயாராகி இருக்கும் முதல் திரைப்படம் 'அயோத்தி'. இதில் சசிகுமார் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார்.
இவருடன் பொலிவுட் நடிகர் யஸ்பால் சர்மா, ப்ரீத்தி அஸ்ராணி, விஜய் டி வி புகழ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என் ஆர் ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார்.
காசியை பின்னணியாக கொண்டு தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை டிரைடண்ட் ஆர்ட்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். ரவீந்திரன் தயாரித்திருக்கிறார்.
இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற முதல் பாடல் வெளியிடப்பட்டிருக்கிறது.
'திருட்டு பயலே அவ திருடி போயிட்டா.. வறட்டு நெஞ்ச அவ வருடி போயிட்டா...' என தொடங்கும் பாடலை பாடலாசிரியர் ல. வரதன் எழுத, என். ஆர். ரகுநந்தன் இசையில், கிராமிய பாடகர் மதிச்சயம் பாலா பாடியிருக்கிறார்.
இந்த பாடலுடன் பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியாகி இருக்கிறது. துள்ளல் இசையாகவும், கிராமிய பாணியிலான பாடலாகவும் தயாராகி இருக்கும் இந்த பாடல், இணையவாசிகளிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM