வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேன் ஒன்றும் கொழும்பிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த கனரக வாகனம் ஒன்றும் இன்று அதிகாலை 5.30 அளவில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதாக மதவாச்சி பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இந்த விபத்தில் இரண்டு பெண்களும் ஒரு ஆணும் உயிரிழந்துள்ளதுடன் ஒருவரின் நிலமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் அவர் வவுனியா  வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

மேலும், உயிரிழந்தவர்கள் தெஹிவளை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஏ9 பிரதான வீதி, இரட்டை பெரியகுளம் பகுதிக்கு அருகே இடம்பெற்ற இந்த விபத்தில் வேனில் பயணித்தவர்களே பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.