(லோகேஸ்)

கண்டி - தொழுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புப்புரஸ்ஸ ஸ்டெலன்பேர்க் தோட்டத்தில் வசிக்கும் மக்களுக்காக நிர்மாணிக்குப்பட்டுவரும் வீடுகள் தொடர்பில் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

 குறித்த பகுதியில் கடந்த 2009 ஆம் ஆண்டு தொடக்கம் பல்வேறு மண்சரிவு சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில் அப்பகுதி மக்களுக்கு வீடுகள் அமைக்கப்படும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இதன்படி சுமார் 40 குடும்பங்களை  சேர்ந்தவர்களளுக்கு வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தற்போது குறித்த நிர்மாணப்பணிகள் முறையாக இடம்பெறுவது இல்லையென மக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

 இதேவேளை கட்டபடும் வீடுகளுக்கான காணி 7 பேர்ச் என கூறப்படும் போதும், அதைவிட குறைவான அளவிலேயே இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன,  கட்டப்படும் வீடுகளுக்கு முன்னால் போதிய இட வசதிகள் இல்லை¸ கட்டிட நிர்மாணங்களில் உபயோகிக்கப்படும் மூலப் பொருட்களில் தரம் இல்லை¸  அதுமாத்திரமின்றி வீடுகளின் சில நிர்மாண பணிகளுக்கு  பாதிக்கபட்ட குடுபங்களிடம் பணம் கேட்கப்டுவதாகவும் மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இதன்காரணமாக பாதிக்கபட்ட குடும்பங்கள் வீடுகளை பொறுப்பேற்கமாட்டோம் என கூறியுள்ளனர். இதனால் இந்த வேலை திட்டத்தை உடனடியாக இடை நிறுத்துமாறு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் பணித்ததற்கு இணங்க வேலைதிட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தபட்டுள்ளது. 

இந்நிலைமை தொடர்பில் வீடமைப்பு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் அவர்களை தொடர்பு கொண்ட போது,

அங்கு ஏற்பட்டிருக்கும் முறைக்கேடு தொர்பாக சம்பந்தபட்ட அமைச்சருக்கும் மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமனி அவர்களுக்கும் முறைபாடுகளை மேற்கொண்டுள்ளேன். அதற்கு அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்கள். என்னை பொருத்தவரையில் இந்த வீடுகள் அமைப்பதில் முறைகேடு நடைப்பதை அங்கீகரிக்க போவது இல்லை. அவர்களுக்கு முறையாக வீடுகள் அமைத்து கொடுக்க வேண்டும் என்று கூறினார்.

இதேவேளை இது தொடர்பில் பெருந்தோட்ட மணித வல அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ.புத்திரசிகாமனி அவர்களிடம் வினயபோது, 

வேலைதிட்டம் தற்காலிகமாக  நிறுத்தபட்டுள்ளது. காரணம் மேற்படி குறைபாடுகளை மக்கள் முறையிட்டதற்கு இணங்கவும். தற்போது முன்னெடுக்கபட்டுள்ள வேலைகளின் தரத்தினை பரிசோதிப்பதற்குமாகும். இன்னும் ஓர் இரு தினங்களில் நானும் எமது அதிகாரிகளும் குறித்த இடத்திற்கு நேரடியாக விஜயம் செய்து, பாதிக்கபட்ட மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப அவர்களின் விருப்பத்திற்கு அமைய வீடுகள் அமைக்க ஒதுக்கிய பணத்திற்கு பெருமதியான வீடுகள் கிடைப்பதற்கு  நடவடிக்கை எடுக்கப்படும். 

தற்போது வீடுகள் அமைப்பதற்காக ஒதுக்கப்பட்ட நிதியைவிட மேலும் இவர்களுக்கான உட்டகட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள பணம் ஒதுக்கபடும். அமைக்கப்பட்டு வரும் வீடுகள் தோட்ட நிர்வாகத்தினால் தெரிவு செய்யபட்ட குத்தகையாளர்களிடமே வழங்கப்பட்டுள்ளது. அவர்களிடம் ஏதும் முறைகேடு இருந்தால் புதிய குத்தகையாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.